சரக்கு வண்டி துடைப்பவன். (2).
பள்ளி சென்று
படிக்கப் பழகாததால்
அவன் பழகிய பழக்கங்களதிகம்.அரைமணிக்கும் குறைவில்
துடைத்துவிடுதலோ
காற்றிறங்கிய சக்கரமாற்றுதலோ
அதற்கான ஜாக்கி தூக்குதலோ
ஓட்டமாய் ஓடிப்போய்
ஆஃப்புடன் முட்டை பிரியாணி வாங்குதலோ
முத்தண்ணனிடம்
பிடறியில் வாங்கிய அடிகளின்
விகுதியால் கற்றவையிந்த
தொழில் நேர்த்திகள்.பெங்களூருவிற்கும்
ஐதராபாத்திற்கும்
ரேணிகுண்டா வழி திருப்பதிக்கும்
அங்கெல்லாமிருக்கும்
மலிவுவிலை மாதர்களின்
வீடுகளுக்கும்
பாதையறிந்ததென்னவோ
முத்தண்ணாவிடந்தான்.அதிகமாய் சரக்கேற்றவும்
டோல்கேட் அதிகாரிகளைச்
சரிகட்டவும்
சட்டவிரோத சரக்குகளை
மற்ற சரக்குகளுடன்
மறைக்கவும்
அறிந்ததெல்லாம்
குறைந்த நாட்கள்
குடும்பப் பிரிதலில்
அதிக வருமானத்திற்காய்
மாரியப்பனுடன்
இணைந்த நாட்களிலதான்.அத்தனையும்
இதற்குமேலும் கற்றுத்தந்த
முத்தண்ணாக்களும்
மாரியப்பன்களும்
கடைசிவரைக் கற்றுத்தரவேயில்லைகாவல்துறையிடம் கள்ளச் சரக்குகளோடு
மாட்டிக்கொள்ளும் சமயங்களிலோ
தூக்கக் கலக்கத்தில்
நடைபாதைவாழ் மக்கள்மீது
வண்டியேற்றிய பொழுதுகளிலோ
க்ளீனர்களை மாட்டிவிட்டு
தான் மட்டும்
தப்பிக்கும் வித்தைகளை.
ESTÁS LEYENDO
கோட்டோவியங்கள்
Poesía~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்