சாகும்வரை அப்பா
அணிந்திருத்தது
ரப்பர் செருப்புதான்.எட்டு ரூபாய்
தொன்னுற்றொன்பது
பைசாவில் தெடங்கி
கடைசியாய் வாங்கிய
செருப்பின் விலை
ஐம்பத்தொன்பது ரூபாய்
தொன்னுற்றொன்பது காசு.வாரறுந்துபோன
செருப்புக்கு
சிறு ஊக்கு கொண்டு
இணைத்து
அணிந்து கொள்வாரவர்.அந்நாளிலெல்லாம்
எங்களுக்கும்
ரப்பர் செருப்புதான்
வாங்கித் தருவார்.
தோல் செருப்பு
கேட்டால்
"அய்யா பெரியாளாயி
வாங்கிக்கிடுவீகளா"மென்பார்.பெரியப்பா வீட்டில்
நான் மறந்து விட்டுவந்த
செருப்பை
தன் சைக்கிள்
கேரியர் க்ளிப்பில் மாட்டி
எடுத்து வந்த நாளில்
அதை தலையில்
சுமந்ததாய் பாவனை காட்டிஅந்த பரதன்
அண்ணனோட பாதுகையைத் தூக்கிட்டு வந்தான்.
இந்த பரதன்
மகனோட பாதுகயைத்
தூக்கிட்டு வந்தான்என்றார்.
KAMU SEDANG MEMBACA
கோட்டோவியங்கள்
Puisi~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்