ஆழியில் பெருக்கெடுத்த
பெருங்காமத்தை
அள்ளி விழுங்கியபோது
தொண்டையை அழுத்தி
அதை அங்கேயே நிறுத்தி
எனை வலமொரு பாகமாய்
கொண்டாய் நீ.நித்தம் நித்தம்
நீயொரு பாகனாய்
பெருங்காதல்
கொண்டாடிய போதும்
கண்டத்தில் நீலமாய்
மின்னிக் கொண்டிருக்கிறது
அந்த ஆலகாலம்.
![](https://img.wattpad.com/cover/78651543-288-k745593.jpg)
KAMU SEDANG MEMBACA
கோட்டோவியங்கள்
Puisi~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்
நீலகண்டம்.
ஆழியில் பெருக்கெடுத்த
பெருங்காமத்தை
அள்ளி விழுங்கியபோது
தொண்டையை அழுத்தி
அதை அங்கேயே நிறுத்தி
எனை வலமொரு பாகமாய்
கொண்டாய் நீ.நித்தம் நித்தம்
நீயொரு பாகனாய்
பெருங்காதல்
கொண்டாடிய போதும்
கண்டத்தில் நீலமாய்
மின்னிக் கொண்டிருக்கிறது
அந்த ஆலகாலம்.