கட்டுண்ட பூனை

21 4 0
                                    

கதவைத் திறந்தவுடன்
குதித்தோடி
பால்கனி கம்பிகளுக்குப் பின்
நிற்கிறதென
விழுந்து விடாமலிருக்க
வீட்டிற்குள் பிடித்திழுத்து
கயிற்றில் கட்டிப்போட்ட
உங்கள் வளர்ப்புப் பூனையால்
நாளெல்லாம் கத்தி கத்தி
தூங்கிவிடுவதை விட
வேறென்ன செய்துவிடமுடியும்?

#இனியசுதந்திரநாள்வாழ்த்துகள்.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now