பிரிவுழிக் கலங்கல்

5 1 0
                                    

தூரத்தில் கேட்கிறது
துயரத்தில் இசைக்கும்

ஓர் ஆலாபனை பாடகனின்

முகாரி ராகங்கள்.

நிலவைக் காட்டி ஊட்டிய வட்டமுதை மறுதலித்து 

முலைப்பாலுண்ட அயர்சியில்

தொட்டிலில் தூங்குகிறது நம்

குழந்தை.

நீயில்லாத இந்த இரவுகளில்
நாம் கூடிக்களித்த கட்டிலின்
கேலிகளில் தூக்கமின்றி
விடிகின்றன பொழுதுகள்.

பொருள்வயின் பிரிவில்

உன் அருகாமை

அனுதினமும் வாய்க்காது

எனத்தெரிந்தும்

அதனையே ஆராதிக்கிறது

அபலையாய் இந்த மனது.

கோட்டோவியங்கள்Donde viven las historias. Descúbrelo ahora