கைக்கிளை

27 3 0
                                    

கிண்ணத்தில் குவியும்
சாமபல் துகள்களாய்
எனையெறித்தேயழிக்கிறது
மனப்பொந்திடை நுழைந்த
அக்னிக் குஞ்சாய் உன் காதல்.

நானொரு ஆலாபனைப் பாடகன்.
என் ஆதாரச் சுருதிகளெலாம்
நீதான்.

சிறுதூர இரயில் பயணங்களில் பாடும் விழியற்ற பாடகனைக் கடப்பதைப் போலவே
சடுதியில் கடக்கிறாய்
கனத்த மௌன மொழிபேசும்
விநாடிப் பார்வைகளில்.

உன் நிராகரிப்புச் சிலுவைகளில்
மரித்த என் காதல்
இரண்டாம் நாளே
உயிர்த்தெழுந்து விடுகிறது
முன்பை விட அதி வீரியமாய்.

கோட்டோவியங்கள்Onde histórias criam vida. Descubra agora