கோட்டோவியம் - 2.

119 4 1
                                    

கிண்ணத்தில் குழைத்த
வண்ணத்தில்
வரைதிரையில்
மேலுங்கீழுமாய்
கோடுகளை
வரைய ஆரம்பித்தான்
ஓவியன்.

நகரமும்
நகரத்தையடுத்த
மிகப் பெரிய காடுமாய்
வரைந்தான்.

நகரத்தை வரைந்தவன்
அதில்
உங்களையும்
என்னையும்
வரைந்தான்.

நீங்களும் நானும்
இப்போது
செய்வதையெல்லாம்
வரைந்தான்.

சற்றே பின்புறமாய்
இரண்டடி நகர்ந்து
ஓவியத்தைப் பார்த்த
அவன்

எதிலும் உடன்பாடின்றி
கையிலிருந்த
தூரிகையை
விட்டெறிந்துவிட்டு
ஓவியத்திலிருந்த
காட்டிற்குள்
ஓடி ஒளிந்து
கொண்டான்.

ஓவியத்திலிருந்த
நீங்கள்
செய்வதறியாது விழித்து
தன்னிச்சையாய்
செயல்படத் துவங்கினீர்கள்...

நானுங்கூடத்தான்.

நன்றி.
கிண்ணத்தில் குழைத்த வண்ணத்தில் என்று முதலடி எடுத்து கொடுத்த  வண்ணதாசன் ஐயாவிற்கு நன்றி.

கோட்டோவியங்கள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang