அம்மாவுக்கென்று ஒரு
தங்க கழுத்தாரம்.
அப்பாவிற்கோ
ஒரு பளபளக்கும்
மூக்குக் கண்ணாடி சட்டமும்
ஒரு கைத்தடியும்.
மணமான தங்கைக்கும்
தம்பி மனைவிக்கும்
ஒரே கலரில் புடவை.
தம்பிக்கும் மைத்துனருக்கும்
தலா ஒரு ரேபான்.
குழந்தைகளுக்கோ
விதவிதமாய் சாக்கலேட்டுகள்.
நண்பர்களுக்கென வாங்கிய
ஒய்யார மது போத்தல்கள்.
எல்லாரையும் மகிழ்விக்க
இவை போதும்.எதைக்கொடுத்து உன்னை
மகிழ்விக்க என் கண்மணி.பெட்டியிலடைக்கும் பொருள்களோ
நிரம்பி வழியும்
வங்கிக் கணக்குகளோ
திருப்பித் தருமா
ஒரு குடும்பத்தின்
பெருவாழ்வுக்கென
தன் இளமையின் கனவுகளைப்
பொசுக்கிக் கொண்டவளின்
தனிமை இரவுகளையும்
அவற்றில் அவளிழந்த
சுகங்களையும்.
VOCÊ ESTÁ LENDO
கோட்டோவியங்கள்
Poesia~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்