அடுத்தது உனக்குத்தானா

24 7 0
                                    

உன் அக்காளின் திருமண
மண்டபத்தில்

யாரும் பார்க்காத வேளையில்
கொத்துப் பூவை எந்நன்
கையில் தந்து
திரும்பி நின்று
சிகை காட்டி
உனக்குச் சூட்ட
சொன்னதிற்கும்

ஆளற்ற அறைக்கதவின் பின்னால் நின்று
கண்ணால் அழைத்து
அவசரமாய்
என் கன்னத்தில்
நீயளித்த முத்தத்திற்கும்

இத்தனைக்கும் இன்னபிற
களியாட்டங்களுக்கும்
காரணம்
காலைப் பந்தியில்
உன்னுடனமர்ந்து
உணவருந்திய உன்
ஒன்றுவிட்ட அத்தை
"என்னடி இவளே
அடுத்தது உன் கல்யாணந்தானே"
என்றுரைத்த பரிகசிப்புத்தானா?.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now