முதல் யுத்தம்.

15 2 0
                                    

முத்தத்தைக் கேட்டேன்
புறமுதுகு காண்பிக்கிறாய்.
பின்னங்கழுத்தில்
நான் கொடுக்க நெருங்குகிறேன்.
வெடுக்கென எழுகிறாய்.

நான் கேட்பதும் நீ தருவதும்
இதுவொன்றும் முதன்முறையல்லவே
இன்றென்ன புதிதாய்
ஒரு வெட்கம்.

வெட்கத்தை விட்டு வீரங்கொள்.
ஒரு முத்தத்தைக் கொடுத்து
அந்த யுத்தத்தைத் தொடங்கு.
இது இருவருக்குமான இரவு.

வா இருவருமே வாகைசூடுவோம்.

கோட்டோவியங்கள்Where stories live. Discover now