காதல் கணவா...

69 7 0
                                    

காலையில் முன்னெழுந்து
காதலாய் கசிந்துருகி
முத்தமிட்டு
என்னையழுப்பி
கருப்பட்டி கலந்து
காப்பி தந்த
காதல் கணவா

நேற்றிரவில்
விருப்பமில்லையெனத் தெரிந்தும்
என்னை வலியப்
புணர்ந்த உன்னை

மன்னித்ததாய்
நடித்தேன்

பிழைத்துப் போ.!

கோட்டோவியங்கள்Where stories live. Discover now