கலியாண மண்டபத்தில்
தானமர்ந்த வரிசைக்கு
நான்கு வரிசை முன்னால்
அமர்ந்திருந்த
தன் தாய்மாமனை
வாட்ஸ்ஸப்பில்
நலம் விசாரித்தான்
அவர் அக்கா மகன்.
அவனைத்
திரும்பிப் பார்த்துப்
புன்னகைத்த அவரும்
அங்கமர்ந்தபடியே
அக்காளை விசாரிக்கத் துவங்கினார்
பதில் செய்திகளிலேயே.
உறவுகளுக்கும்
உணர்ச்சிகளுக்கும்
நடுவில்
கௌரவ நாற்காலியில்
அமர்ந்திருக்கிறது
விஞ்ஞானத்தின்
அற்புத படைப்புகளெல்லாம்.
ESTÁS LEYENDO
கோட்டோவியங்கள்
Poesía~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்