இரண்டு ஒலக்கக் கொழுந்துகள
பெத்து ஆளாக்கி
கலியாணமும்
கட்டிவச்ச கோமளத்தக்கா
நாலுவீட்டில பத்துபாத்ரம்
தேச்சு வயித்த
கழுவிட்டிருக்கா ...
தனியா கிழவி
படுறபாட்ட பாக்கமுடியாம
சம்முகம் அண்ணாச்சி
தாலுகாபீசுக்கு
நடையாநடந்து
முதியோர்பென்சன்
வாங்கி குடுத்ததக்கப்புறந்தான்
பேரன காட்ட கூட்டியாந்தேன்
பேத்தி பாக்கனுஞ் சொன்னான்னு
பாசத்த காட்டி
ஆயிரம் ரூவாய்க்கு
சல்லியடிக்கிறாளுவ மருமவளுக.
சாகுற வயசில
நோயிலகீயில படுத்துராம
கிழவி பட்டுனு போயிரனுங்கிற
ஒத்தக்கவலதான்
சம்முகண்ணாச்சிக்கு.
STAI LEGGENDO
கோட்டோவியங்கள்
Poesia~~~~~~ரெஜி~~~~~~ ஒரு மழைக்கால மாலையில் எனது வானத்தில் வானவில்லாய் பூத்தாய் நீ. வாழ்க்கையின் வரைதிரையில் வரையும் எல்லா ஓவியங்களுக்கும் உன்னிலிருந்தே வண்ணந்தீட்டிக் கொண்டிருக்கிறேன் நான்