" கலைவாணி அட்டெண்ட்டர் யாருங்க ? " , மிகவும் பரபரப்பாக இருவர் நெருங்கினார்கள் அந்த செவிலியிடம் . அவர்களை கண்டவுடன் ," ஏங்க , எத்தனை தடவை தான் சொல்றது எல்லா திங்சையும் கழட்டி விட வேணும்னு" , என்றார்.
அதற்கு உடனேயே ," ம் ... ரிமூவ் பண்ணிட்டோமே மேம் ", என்றான் அவ்விளைஞன் .
" என்ன ரிமூவ் செஞ்சீங்க ? கால்ல கொலுசு அப்பிடியேதான் இருக்கு", என்று சிடுசிடுப்புடன் கூறினார்.
" வந்து , கழட்டுங்க ", என்றவுடன் ,
" ஓ , சரி " என்று உள்ளே செல்ல முயன்றான்.
" நீங்கள் எங்க வரீங்க? " என்றாள் அவள்.அவன் முகத்தில் சிறு சுழிப்பு ஏற்பட்டது .
அதனை கண்டவுடன் " only ladies sir , gents not allowed " , " நீங்க வாங்க அம்மா " என்று அருகில் அவனது தாயிடம் உரைத்தாள் .
ஏதோ சொல்ல வந்தவனை பார்வையால் அடக்கியவர் . அப்பெண்ணை தொடர்ந்து உள்ளே நுழைந்தார் கலைவாணியின் அன்னை அபிராமி .
பிரசவ அறையிலேயே மகளை காண போகும் ஆர்வம் அவரது விழிகளில் பளிச்சிட்டது . அந்த விஸ்தாரமான அறையில் , அவள் மட்டுமே இருக்க , இரண்டு மணிநேரம் ஆகியும் அவளது சுகமான வேதனை முற்று பெறவில்லை . ஒவ்வொரு தாயும் எதிர்பார்க்கும் இனிய தருணம் இது .
ஆனால் நம் நாயகியோ , " அம்மா என்ற அழைப்பிற்கு ஏங்கி தவிக்கும் எத்தனையோ பேர் இருக்க.. என் மடியில் தவழும் ஆசை ஏன்னடா உனக்கு ? " என்று இன்னுமே வெளிவராத மகவிடம் அந்நிலையிலும் உரையாடிக் கொண்டு இருந்தாள் .
அவளது முகத்தில் ஏற்படும் வேதனை எதனாலோ ?...தம் மகளின் உள்ள போராட்டம் உள்ளே நுழைந்த அபிராமியின் பார்வையில் தப்பாமல் விழுந்தது . அதனை கண்டவுடன் மகளை காண சந்தோஷமாக வந்தவர்க்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க நீண்ட பெருமூச்சை விட்டபடி வேகமாக மகளை நெருங்கியிருந்தார்.
"அம்மாடி ", என குரல் வந்த திசையை நோக்கியவளது விழிகள் பளிச்சிட , "ம்ம்மா..." என்று வெளிவராத குரலில் காய்ந்து வெடித்திருந்த அதரங்களை பிரித்து முனங்கினாள் பெண்ணவள்.
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...