உணர்விலே கலந்தவனே - 59

2.7K 65 14
                                    

பகுதி - 59

கலை கடையின் பொறுப்பேற்று... இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றிருக்க...இன்று 51 ஆம் ஆண்டு விழா... இரு தினங்களாகவே அவர்கள் திருப்பூரிலேயே தங்கியிருந்தாலும்... காலை முதல் பரபரப்பில் இருக்கும் மனைவியை தொடர்ந்தவனாக... படுக்கை விட்டு எழாமல் ரசித்தவனாகவே படுத்துக் கிடந்தவனிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருந்தாள்....

சிறப்பு விருந்தினர்களாக... நடிகர் நடிகைகளை எவரேனும் ஒருவரை அழைக்காமல்... இந்திராதேவியையும்... ஐஏஎஸ் அதிகாரியையும் தலைமை தாங்க அழைத்திருந்தாள் .

" ஏய்... பத்து மணிக்கு இப்பவே ஏன்டீ படுத்துற... பிரபல நடிகைகளின் பெயர் சொல்லி... எவளையாவது கூப்பிட்டு இருந்திருந்தேன்னா... நீயே என்னை எழுப்பி இருக்க வேணாம் நானே இந்நேரம் கடைல இருந்திருப்பேன்... இவ என்னடான்னா...  பாட்டீஸ்சையா இன்வெய்ட் பண்ணியிருக்கா..." என்று சலிப்பாக சொல்லியவனாக அசையாமல் இருக்க... வெட்டவா... குத்தவா... என்று பார்த்தவளை... வாய்விட்டு நகைத்து... ரசித்து இருந்தான்...

" உங்கள... உங்களுக்கு இவ்வளவு அலும்பு ஆகாதுங்க... நானே ஈவ்னிங் எப்படி பேசறதுன்னு தெரியாம... டென்ஷன்ல... இருக்கேன் நீங்க... உங்களுக்கு நடிகைங்க கேக்குதோ.‌."  என்று தலையணையை எடுக்க... சத்தமாக நகைத்தவன்... அவள் கரங்களை அப்படியே தன் நெஞ்சோடு  இழுத்து அழுத்தி கொள்ள... அவன் மேலேயே விழுந்திருந்தாள்...

தாடையில் அமர்ந்திருந்த வியர்வை துளிகள்... ரோஜாவின் மீது இருக்கும் நீர்துளிகளாக... அவனுக்கு தெரிய... தன் கட்டைவிரல்களால் துடைத்தவனாய்... " எதுக்கு இவ்வளவு டென்ஷன்..." என்றான் மென்மையான குரலில்...

" தெரியலைங்க... அது கடை விழா மட்டும் இன்னைக்கு இல்லையே ஈவினிங் வேற இருக்குல்ல... ஆனா ரொம்ப நெர்வசா இருக்கு... மே பி.. இந்த  சந்தோஷத்தை கொண்டாட... அப்பா இல்லைங்கற வருத்தமா இருக்கலாம்..." என்று அவள் தோள் சாய்ந்திருந்தாள்...

மென்மையாக மிக மிக மென்மையாக தலைகோதியவன்... " சரிடா... ரொம்ப குழப்பிக்காத.‌‌... நீ சொல்ற மாதிரி... எப்பவும் அவங்க நம்மகூட தான் இருப்பாங்க... சரியா..."  என்று கூறி நெற்றியில் முத்தம் பதிக்க... சற்று தெளிந்தவள்.‌.

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ