பகுதி - 39
கலை சென்றுவிட... உடனே கீழே சென்றால் நிச்சயமாக தன்னால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்ததாலேயே அலுவலக அறைக்குள் நுழைந்தவன் சில பல மணித்துளிகள் கடந்தே வர.. அப்பொழுதுதான் கலையும் நுழைந்திருப்பாள் போலும்... அவளது அலைபேசி அலற...
" தேவ்மா...." என்று மொத்த ஏக்கத்தையும் குரலில் தேக்கி வைத்தவளாக அழைக்க... அது காற்றின் வழியே அவனை சென்றடைந்ததோ என்னவோ அருகே இருந்தவனை அடைந்து உயிருக்குள் கலந்து இம்சிக்க... அவளது முகத்தை பார்க்க... வெகுவாக அழுதிருப்பாள் போல... கன்றி முகம் சிவந்து இருந்தாலும்... மகனுடன் மும்முரமாக பேசியபடி இருந்தாள் ...
" ம்மா... இன்னைக்கு எங்க இங்கிலீஷ் மேம் எனக்கு பென் தந்தாங்களே... " என்று குதூகலிக்க...
" எதுக்கு கண்ணா... " என்று இதுவரை நடந்ததை மறந்தவளாய்...
" ம்மா... என்னாச்சு மா... உடம்பு சரியில்லையா..." என்று அவள் குரலில் இருந்த கரகரப்பில் கண்டு கொண்டவனாக கேட்க...
மகன் அவ்வாறு கேட்கவே... மேலும் காயப்பட்ட இதழ்கள் துடிக்க... அழுத்தமாக பற்றிக் கொண்டவள்... நெகிழ்ந்தாலும்...
" அப்படியொன்னும் இல்ல தேவ்மா... ஏன் கேக்குற..." என்று வரவழைக்கப்பட்ட சிரிப்போடு தொண்டையை சரி செய்து கேட்க... அவளது குரலில் இருந்த தெளிவில்... தெளிந்தவனாய்... " எனக்கு இன்னைக்கு எங்க இங்கிலீஷ் மேம் பென் தந்தாங்களே... " என்றான்
" ஏன்டாமா... "
" இன்னைக்கு நான் சூப்பரா செமினார் எடுத்தேன்... அதுக்குதானே... " என்று மற்ற கதைகள் அனைத்தும் பேச... அவளும் முழுமையாய் இணைந்துவிட...
வீடியோ காலை தேவா அழுத்தவும்... அவள் ஏற்க... மகனை பார்த்தவனாக... மனைவியின் பின்புறமாய் நெருங்கி நின்றவனாய்... நிகிலும் இணைந்துவிட... தாய் தந்தை இருவரையும் ஒரு சேர பார்த்ததில் துள்ளி குதித்தவனாய்... பள்ளியில் தொடங்கி கவிதாவுடன் வெளியில் சென்று வந்தது வரை கூறியவன்... இங்கிருக்கும் மற்றவர்களை... உறவுமுறை சொல்லி அழைத்து விசாரிக்கவும் தவறவில்லை... கலையை அலைபேசி வழியாகவே ஆழமாய் பார்க்க... அவன் கண்கள் கூறிய சேதியறியாமல் இருந்தவளை மெதுவாக... தன் அருகே அமர வைத்து நெருக்கத்தில் இருந்தவனாகவே சியாமளா... கவிதாவுடனும் பேசினான்...

YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...