உணர்விலே கலந்தவனே - 13

2.2K 55 0
                                    

அஷ்வந்... கலை தன்னை பார்க்க வேண்டும் என்று கூறியதும் சண்டையிட வருவதாகதான் எண்ணினான் ‌. ஆனால் அவள் கேட்ட கேள்வியில் கீர்த்தயை யோசித்து வரவில்லை தன்னை மட்டுமே யோசித்து வந்துள்ளாள் என்பதை குறித்து வியந்து போனான் .

தோழியையும் விட்டு கொடுக்காமல் தன் காதலையும் மதித்தவளின் மீது தனி பிரியமேயெழுந்தது... அது மெய்ப்பிப்பது போல் அவளால் மட்டுமே உன்னிடம் பழகினேன் ஆனால் இப்போது உன் சகோதரியாய் மட்டுமே யோசிக்கிறேன் என்று அவளது பரிணாமத்தில் நெகிழ்ந்துதான் போனான் .

இருவருக்கும் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு எதுவும் தெரியாது.,. ஆனால் அவள் அழகாய் எழுப்பிய அந்த சகோதத்திரத்துவ கட்டமைப்பில் அவனையும் ஈர்த்துவிட்டாள் . கீர்த்தியை பற்றியும் தன்னை பற்றியும் மட்டும் யோசிக்காமல் தான் செய்த செயலால் அவந்திக்காக.. அவள் வாதிடியதில் உவகை கூடினாலும் இந்த குணத்தால் தான் கீர்த்தியின் வாயிலிருந்து கலையை பத்தி மட்டுமே தான் தொலைபேசியில் பேசும் பொழுதெல்லாம் வருமோ‌... என்று நினைத்தான் .

அஷ்வந் நினைக்கவே இல்லை... அன்னையின் மனதில் தன் அத்தையிடமும்... கீர்த்தியிடமும் இவ்வளவு வன்மம் இருக்கும் என்று... இருபது வருடங்களுக்கு முன்பு தன் கணவனை இழந்து... நான்கு வயது சிறுமியுடன்‌... தாய்வீடு தேடி வந்த மாதங்கியை ( கீர்த்தியின் அன்னை ) வீட்டிற்கு உள்ளே கூட விடவில்லை அவனது அன்னை .

" நா எங்கே அண்ணி போவேன்..." கதறிய மாதங்கியின் மீது சிறிதளவு கூட இரக்கம் வரவில்லை... அந்த கல் நெஞ்சம் படைத்த பெண்மணிக்கு....தன் அண்ணன் வாய் திறக்க மாட்டாரா என்று ஏங்கிய பார்வை... பார்க்க...
அதற்கு அவரோ " நீ முதல்ல இங்க இருந்து கிளம்பு... " என்று விரட்டினார் .

அதற்கு மேல் அங்கு நிற்க ரோசம் கெட்டவர்களா... உடனே தன் மகளை வாரியணைத்து... கிளம்பிவிட்டார் . நடப்பது சண்டை என்பது மட்டுமே புரியும் வயதில் நின்ற அந்த சிறுவனுக்கு... அவர்கள் பேசுயது எதுவும் புரியவில்லை .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora