பகுதி - 43
தான் விரும்பி படித்த படிப்பு... பெற்றோர்களின் கனவு என்பதற்காக மட்டுமே அவர்களது தொழிலை நடத்தி வருகிறான். அவனுக்கு என்று அவர்கள் ஏற்படுத்திய சாம்ராஜ்யம் இருந்த போதிலும்... அவனது லட்சியத்தை கைவிடாதவனாக மருத்துவம் படித்து... இன்று வரை அதில் தனக்கு என்று ஒரு இடம்பிடித்து சாதித்து வருபவன்... தன் அடையாளத்தை மிக கர்வமாக நினைப்பவன்... தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது டாக்டர் சஞ்சய் என்று மிடுக்கோடு கூறுபவன்... முற்றிலும் தன்நிலை மறந்தவனாக பதறியதில்.... அதுவும் தன் உயிராய் நினைத்து படித்த படிப்பையும் மறந்து... தான் மருத்துவன் என்ற அங்கிகாரத்தையே மறந்தவனாய்... பிதற்றவும்... அனைவருக்கும் அவள் மீது கொண்டுள்ள காதல் புரிய .., அவள் கிடக்கும் நிலையை பார்த்து கலங்கவே செய்தார்கள்...
அவன் கூற்றில் ஸ்தம்பித்தவர்களில் முதலில் தெளிந்தது... மாயாவே... "பையா... மூவ்... " என்று அவனை நகர்த்தி பரிசோதித்தவள்...
" ப்ச்சு எதுவும் ப்ராப்ளம் இல்ல..." மயக்கம் மருந்து வீரியம் மட்டுமே என்று கூறி சில மருந்துகளை வாங்கி வர சொன்னாள் ... கலைக்கு செலுத்திய பின்... அவனுக்கும் இரும்பு கம்பியால் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருத்துவம் பார்த்து... அனைவரையும் முயன்று வெளியேற்றியவளாள்.... நரேனையும்... நிகிலையும் விலக்க முடியவில்லை... அந்த அறையில் இருந்து...
சிறிது நேரத்தில்... தன் சகோதரனின் தோளில் கரம் பதித்து கலைத்தவனுக்குமே... சிறு நேரமென்பது சில ஒரு மணி நேரங்கள் கடந்திருக்க... தூங்கட்டும் வா என்று அழைத்து வந்துவிட்டான் நிகிலை...
மொட்டை மாடியில் இருவரும் நின்றிருக்கும் பொழுது வந்த அலைபேசி அழைப்பில் இருவரின் முகங்களும் வெற்றிப் புன்னகையை பூசிக் கொள்ள... நரேனை இறுக்கமாக அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் நிகில் .
முப்பது நிமிடங்கள் துடிக்க வைத்த ஷாக்கஷித்தாவின் செயலுக்கு... முப்பதாண்டு சாம்ராஜ்ஜியத்தையே முழுவதுமாய் அழித்திருந்தான் நிகில் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...