அவன் கண் விழித்து பார்க்கையில்... தனக்கு அடியில் சிக்கி தன் மேல் பிண்ணிப் பிணைந்திருந்த அவளுடைய ஷாலும்... வெறுமையாய் இருந்த கூபேவும்தான்...
அவள் எங்கே சென்று இருப்பாள்... யாராய் இருக்கும்...
அடிக்கடி தன் விழிகளில் விழுந்தவள்... தன் சிந்தனையை மட்டுமல்லாது தன்னையே முழுமை கொள்ளை கொண்டவள்... என யோசித்தாலும்...
அவளை நினைத்த நொடி உடனே காண வேண்டும் என்ற ஆவலை அவனின் கருமணிகள் வெளிப்படுத்த... அவன் மூளையோ வெளியிலோ... டாய்லெட்டிலோ... இருக்கிறாளா என்று பார் என கட்டளையிட... உறைந்த புன்னகையுடன் தேடினான் . ஆனால் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது...
இன்னும் சிறிது நேரத்தில் அவன் இறங்கும் இடமும் வந்துவிடும் என்று புரிந்தேயிருந்தது... எங்கே அவள்... புருவம் சுருக்கி யோசனையை முகத்தில் தாங்கி... மிகுந்த குழப்பத்தோடு வந்தவனின் கண்களில் தப்பாமல் விழுந்தது...
அவன் அவளுக்கு அணிவித்திருந்த சங்கிலி (chain)...
அதுவரை எங்கேயவள் என்று மட்டும் அதிகம் சிந்தித்திருந்த மூளையில் மின்னல் வெட்டி அந்த லைட் flashல் எதற்காக...? என்று கேள்வி உதித்தது.... அவனுள் மறைந்திருந்த இறுக்கம் மீண்டும் பசை போல் ஒட்டிக் கொள்ள...
அந்த சீட்டின் மேல் இருந்த தனது சங்கிலியை எடுத்தவனின் கரமோ நடுங்கியது என்றால் மிகையில்லை...
எப்படி... எப்படி... அவளால் என்னைவிட்டு போக முடிந்தது...
நான் அவளுக்கு வேண்டாமா... இதை எப்படி என்னிடமே திருப்பி தர முடிந்தது.... அப்படியானால்... அதற்கு மேல் யோசிக்கும் திறனற்றவனாய் அந்த சீட்டிலையே பொத்தென்று அமர்ந்தான்.கரங்களில் இருந்த நடுக்கம் இப்பொழுது உடல் முழுவதும் பரவியிருக்க... ஆவலாய் அலைப்பாய்ந்திருந்த விழிகளில் கண்ணீர் நிறைந்திருக்க... கத்தி அழத்துடித்த தொண்டைக்குழியை அடக்க வழித் தெரியாமல் தன் இருப்பை பலமாய் வெளிப்படுத்த... உள்ளங்கையால் முகத்தை மூடி கதறித் தீர்த்தான் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...