உணர்விலே கலந்தவனே - 24

2.3K 58 5
                                    

பகுதி - 24

வானத்தின் விண்மீன்கள் தரையிறங்கி ஊர்ந்து செல்வது போல்... வாகனங்கள் நகர்வலம் நடத்த... அந்த நெடுஞ்சாலையில் நந்தனின் காரும் ஐகியமாக... அவனுடைய மகிழூந்து (car ) மட்டுமல்லாது... சற்று முன் நடந்த நிகழ்வுகளே... ஊர்ந்து... மனதை அரிக்க... அமைதியாய் பயணித்தவனின்... சிந்தனையை கலைத்தவளாய் ,

" உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..." என்றாள் கீர்த்தி கோபமாக...

" என்ன.." என்பது போல் பார்த்தவனை...

" இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை..." என்று வாய்விட்டு முனங்கியவளிடம்...

" வேற எதுக்கு..? " என்றான் .

" எதுக்கா... ஏன்‌.. உங்களுக்கு தெரியாது‌... நீங்க... நீங்க கலைய தப்பு சொல்லல‌... " , என்பதற்குள்ளாக கீர்த்தியின் உடல் நடுங்கிற்று.... அவ்வளவு கோபம் .

"தப்பு சொன்னேனா... நா என்ன தப்பு சொன்னேன்..‌ " குழப்பமாக வினவ... அவளது முறைப்பில்... எதை சொல்லுகிறாள் என்று நினைவு கூர்ந்தவன் . பெருமூச்சை வெளியிட்டவனாக... அதே சமயம்... ஆழ்ந்த சிந்தனையோடு... அமைதியாய்...

"அவ செஞ்சது தப்பே இல்லைங்கீறியா...? " என்றான் நந்தன் .

"அப்படி தப்பு பண்ணினவளுக்கா... நீங்க ஏன் மண்டியிட்டீங்க...? " என்று ஆச்சரியம் போல் நக்கலடித்தவளை முறைத்தவாறே...

"அது வேற... இது வேற... " என்று பல் கடித்தவனிடம்...

" எனக்கு உங்க நியாயம் புரியவே.. இல்லை.. தெரியாம கேக்குறேன்... உங்க அண்ணங்கறதால... அவ தப்பானவளா...போயிட்டாளோ...." என்று அனல் தெறிக்க பேசியவளை

" சும்மா... உளறாத கீர்த்தி... நான் என்ன சொல்றேன்... நீ என்ன...பேசுற..." இடைமறித்தவனாக... அதை கண்டு கொள்ளாத கீர்த்தியோ....

" அவ ஒரு முட்டாள்... உங்கள நம்பி... நீங்க கைக்கொடுக்கும் தெய்வம்னு இருக்கா பாருங்க... அவள சொல்லணும்.... நேத்து வரைக்கும் அவன் கெட்டவன்... இன்னைக்கு இவ தப்பானவளா...? " பொறிந்தவளிடம்....

தன் ஆத்திரத்தை அடைக்கியவாறே... " நான் எப்ப... அப்படி சொன்னேன்... அவ விட்டு வந்தது தப்பு பண்ணிட்டான்னு தான சொன்னே..." என்று பொறுமையை கையில் எடுத்திருப்பது போல் பதிலளித்தவன்... சாலையோராமாக வண்டியை நிறுத்திவிட்டான் . அதை கீர்த்தி கவனிக்கவில்லை... அதனால் தன் வாதத்தை தொடர்ந்தவளோ...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя