உணர்விலே கலந்தவனே - 49

2.6K 65 4
                                    

பகுதி - 49

சஞ்சய் வெளியேறியதும்... படுத்துக் கொண்டவள் உறங்கி முழித்தாலோ... இல்ல மூடிய விழிகளை மட்டுமாய் பிரித்தாலோ... கருமணி அசைவில்  அதிகாலை நான்கு என்று தெரிந்ததும்... எழுந்து குளித்து புத்தம் புது மலராய் வெளிவர... சஞ்சய் இன்னும் வந்திருக்கவில்லை... அதைப் பற்றிய கவலை எனக்கில்லை... என்பது போல் சியாமளாவின் அறைக்கு மகனை காணச் செல்ல... ஒருகளித்த நிலையில் திறந்திருந்த கதவின் வழியே மகனை மட்டுமே பார்த்தவளாக... நெருங்கியவள்... மென்மையாக தலையை வருடி..‌ பின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து... சாமியறைக்குள் நுழைந்து... மகனின் அறுவைச் சிகிச்சை பற்றிய எண்ணம் மட்டுமே மேலோங்கி... விழிநீர் ததும்ப..‌ மடியேந்தி நின்றவளாக... பிராத்திக்க... எவ்வளவு நேரமாக... தெய்வத்தின் முன் நிற்கிறாளோ தெரியாது... ஆனால் கவிதாவின் தொடுகையில் விழி திறந்தவளின் கண்களில் இருந்த பயம்.. ஏக்கம்... பதற்றம்... அனைத்தையும் சரியாக புரிந்து போக...

" தேவ்கண்ணாக்கு எதுவும் ஆகாது அண்ணி... " என்று ஆறுதல் வார்த்தைகளை அளித்தாள்... அவளும் வணங்கி எழுந்து.." வாங்க... டீ குடிக்கலாம்.."  என்று வலுக்கட்டாயமாக கூட்டி வந்தாள் .

மெதுமெதுவாக.. குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவராய் தங்களின் நாளை தொடங்க... அந்த குட்டிக்கண்ணனுக்கும்  சர்ஜரி நேரம் நெருங்கிவிட்டது... மனைவியை தேடியவனுக்கு.. அவள் கிடைக்காமல் போகவும்... எங்கே என தேடியவன்... அந்த மருத்துமனையின் வெளியே... அழகாய் வீற்றிருக்கும் விநாயகர் கோயிலில் அமர்ந்திருப்பவளை பார்த்தவன் ... வேகமாக நெருங்க... தூணில் தலை சாய்த்து.... மூலவரை மட்டுமே பார்த்தபடி இருந்தவளை தோள் தொட்டு... அசைக்கவும்... பார்த்தவளின் முகத்தில் குடிக் கொணடிருந்த அந்த தாய்மையின் பயத்தை கண்டவனுக்கு... அப்படியே அள்ளிக் கொள்ளவே தோன்றியது.

அவனுக்கு அறுவைச் சிகிச்சை முடிந்தே ‌‌... நாட்கள் கடந்து சில மாதங்களும் நகர்ந்திருக்க... மிக ஆரோக்கியமாகவே தேவ்தரண் வலம் வந்தான்... அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்தாலும்... தாயின் கண்டிப்புக்கு அஞ்சியவனாகவும் இருந்தான் . சஞ்சயோ மகனது முதல் செக்கப் வரை அங்கேயே தங்கியிருக்க... அதன் பின் பயணங்கள் பிடியில் சிக்கிக் கொண்டு... தன் பணியின் மூழ்கியவனாக திரிந்தான்...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora