பகுதி - 57
காலங்கள் அதன் போக்கில் வேகமாக கடக்க... முதல் கட்ட பரிசோதனையில் சஞ்சயின் ஆராய்ச்சி... வெற்றி பெற்றிருக்க... அதன் பிறகே சஞ்சய் நாடு திரும்பியிருந்தான்... அவ்வபோது... மருத்துவனாய்... இங்கு கோவைக்கு வந்து போய் கொண்டிருந்தாலும்... மகனை கூட... மூன்று முறைக்கு மேல் நேரில் சந்தித்து விட்டான்... ஆனால் மனைவியை பார்க்கவே முடியாத நிலை... ஐந்து பத்து நிமிடங்களில் அவளை விட்டு சென்றிட முடியும் என்று தோன்றவில்லை அவனுக்கு...
அவன் இருக்கும் இடத்திற்கு வர சொல்லலாம் என்றாலோ... ஆராய்ச்சி கடைசி கட்டத்தில்... தீவிர சோதனைகள் மேற்கொண்டு இருப்பதால் அவனுக்கே எதற்கும் நேரமிருக்காது என்றும் புரிந்தேயிருந்தான்... பெங்களூருக்கு வந்ததே... இங்கும் கண்டுபிடிப்புகள் நடப்பதால் மட்டுமே... இதற்கே நான்கு மாதங்கள் கடந்திருந்தது...
நீண்ட நாட்களுக்குப் பிறகு... மனைவியை காண பூனேவிற்கு செல்ல வேண்டியிருந்தது... வந்தவன் படிகளில் ஏறும் பொறுமையும் இல்லாதவனாக... லிஃப்டிற்குள் நுழைந்து தங்களின் அறைக்குச் செல்ல... வெறுமையான அறையே அவனை வரவேற்றது...
எத்தனையோ சந்தோஷங்களை.. சஞ்சலங்களையும்.... இருவரும் களைந்திருந்தாலும்... அனைத்தும் அவர்களது இல்லத்தில் கோத்தகிரியில் மட்டுமே... ஆனால் இருவரின் மொத்த உணர்வுகளையும் சுமந்திருப்பது.... இந்த அறையே...
' எங்க போனா.. ' என்று வழக்கம் போல் அவள் நிற்கும் ஜன்னலை பார்க்க... அங்குமில்லை... சரியென பால்கனிக்கு விரைந்து தோட்டத்தில் ஏறிட... " வருவேன்னு தெரிஞ்சுதும்.. ஆட்டம் காமிக்கிறா.. " புலம்பியவனுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விடைப்பெற்றுக் கொண்டிருக்க... மீண்டும் உள்ளே நுழைகையில் பாத்ரூமில் இருந்து வெளி வந்திருந்தாள்....
அவசரமாக வந்திருப்பாள் போலும்... "வாங்க... நீங்க.. " என்று பாதியிலேயே அவள் பேச்சு தடைப்பட்டு விட்டது... அவனது ஆழ்ந்த பார்வையில்... தன் பெருவிரல்களை நன்கு ஊன்றி... அசையாமல் இருந்தவளுக்கு.. அவன் பார்வை வீச்சை தாள முடியாமல் போனதில் தலை குனிந்தவளை.. நெருங்கியவன்.. ஏதும் செய்யாமல் விலகி பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்...
DU LIEST GERADE
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romantikதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...