உணர்விலே கலந்தவனே - 48

2.6K 64 5
                                    

பகுதி - 48

கலை அவன் வரவை எதிர்ப்பார்த்த அளவிற்கு... அவன் வந்ததில் மகிழ்ச்சியில் துள்ளினாளா என்றால் இல்லவேயில்லை... அதுமட்டுமின்றி... ஸாரி என்ற ஒற்றைச் சொல்லில் அனைத்தையும் மறந்துவிடும் அளவிற்கு அவன் செயல்களும் இருந்திருக்கவில்லை... ஏனோ இதுவரை கணவனுக்காக பரிந்து வந்தவளுக்கு... அவ்வாறு நினைத்தது தவறோ என்னும் அளவிற்கே இப்பொழுதும் அவன் நடந்து கொள்வதாக தோன்றியது...

' தப்பான கேள்விக்கு தப்பான பதில்தான கிடைக்கும்... நீ வா அப்படின்னு இவர் கூப்பிட்டது தப்பில்லையாம்.. ஆனா அவருக்கு இணைங்கின நான் தப்பாம்..' என்று அவன் மார்போடு இருகரங்களாலும் தன் கழுத்தை அணைத்து படுத்திருப்பவனிடம் சிரமப்பட்டே... அவன் முகம் பார்த்தபடி யோசித்திருந்தவளுக்கு... அவனிடத்தில் ஒட்டுதல் இன்மையே தோன்றியது...

இப்பொழுது கலைக்கே.. தனக்கு அவனிடத்தில் என்ன வேண்டும்... இல்லை எதை எதிர்பார்க்கிறாள் என்பது தெரியாமல் குழம்பித் தவித்தாள்... ' இப்ப மட்டுமா இப்படி இருக்க... அவங்கள என்னைக்கு பாத்தியோ அன்னேலிருந்தே நீ ...நீயா இல்லை... இதுல வேற புதுசா கண்டு புடுச்ச மாதிரி சலுச்சுக்குற... ' என்பது போல் அவளுடைய மூளை மல்லுக்கு நிற்க... பலமணி நேரமாக புருவமத்தியில் முடிச்சுடன் இருந்தவளுக்கு... அந்த இரும்பு கரங்களாலும் மூச்சுக்கு அதிகம் திணறல் ஏற்பட... மெல்ல உடலை நெளித்து விலக முயற்சி செய்யதவளுக்கு... முயற்சி மட்டுமே முடிந்தது...

' இவங்களால எப்படி இவ்வளவு நிம்மதியா தூங்க முடியுது... ' என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை... ஒருவேளை கலை எதிர்ப்பார்த்திருந்த விஷயங்களுக்கு முறையான விளக்கங்கள் அளித்திருந்தால்... இந்த கணமே அவள் மனதை உணர்த்தியிருப்பாளோ... நாளை சர்ஜரி என்று இன்று கூறுபவன்... இதை என்றோ முடிவு செய்திருக்க வேண்டும்... அதையும் தன்னிடம் சொல்லாமல் இருந்திருக்கிறான்... என்று நினைக்காமலும் இருக்க முடியவில்லை... என்ன நினைத்து கொண்டிருக்கிறான் என்பதே புரியாமல் திகைத்து... தடுமாறி... குழம்பி இருப்பவளுக்கு... ஒன்றுமே புரியவுமில்லை.. தெரியவுமில்லை...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now