உணர்விலே கலந்தவனே - 55

2.7K 62 6
                                    

பகுதி - 55

பாலாவும் விஜய்யும் நெருங்கிய உறவினர்களாக இருந்ததாலும் சிறுவயது முதலே பக்கத்து வீட்டு பிள்ளைகளாய் வளர்ந்ததாலும்... சொந்தம் மீறிய நெருக்கம் பெரியவர்கள் முதல் இளையவர்கள் வரை தொடர... விஜயின் இளைய சகோதரனின் திருமணம்.. இருவர் வீட்டு திருமணமாகவேயிருந்ததில்... இரவு படுக்கைக்கு மட்டும் சியமளாவின் குடும்பம் அவர்களுடைய வீட்டிற்குச் செல்லும்... பகல் பொழுதுகளில் ஒரு குடும்பமாய்   ஆண்கள் திருமண வேலைகளிலும்... பெண்கள் வீட்டு வேலைகளிலும் பங்கிட்டு... சொந்த பந்தங்கள் நிறைந்திருக்க...

எப்பொழுதும் போல் சியாமளாவிற்கு உதவியாய் சமையலில் நின்றிருந்த கீர்த்திக்கு... திடீரென்று வயிற்றைப் புரட்டிய உணர்வு... அதுவும் குக்கர் விசில் அடிக்க... அடிக்க... அவளால் அந்த வாசனையை தாங்கிக்க முடியாமல்... வாஷ்பேஷனைத் தேடி ஓடினாள்...

காலை முதல் இருந்த சோர்வை அலட்சியப்படுத்தியவளாய்... கல்யாண அமளியில் படுத்திருக்க மனமற்று... சூழ்நிலை உணர்ந்து எழுந்தவள்... வேலைகளில் மூழ்கினாலும் சமாளித்தவளாய் இருந்தாள்...

குடலே வெளிவருவது போல் அவள் வாந்தி எடுக்கவும்... அவளது சத்தத்தில் அடித்துபிடித்து சியாமளா வர... எதார்த்தமாக அங்கு வந்த நந்தனும்... அவள் ஓடியதை கவனித்து பின்னோடு தாங்கி நின்றிருக்க... மிகவும்... சோர்ந்தவளாய் இருந்தாள்...

வாய் கொப்பளித்து... அவன் தோளிலே தொய்ந்து சரிந்தவளை... நெற்றி முடியை பின்னுக்கு தள்ளி... தன் கைக் குட்டையால் முகம் துடைத்தவன்..." என்னாச்சுடா... உடம்புக்கு முடியலையா... ?"  என்று கேட்க...

" கீர்த்திமா என்னாச்சு ஏன் திடீர்னு இப்படி வாந்தி எடுக்குற..." என்று அவரும் பதறவே செய்தார் ....

ஆனால் வயதில் பெரியவர் பேரனின் திருமணத்திற்காக வந்திருக்க... "என்ன சியாமளா... ஆம்பளைக்கு தெரியாது... உனக்குமா... புரியலை"  என்று மருமகளை கண்டித்தபடியே அவள் நாடியை பிடித்து பார்த்ததில்... முகம் கொள்ளா புன்னகையுடன் "இரட்டை நாடி.."  என்றார் .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now