உணர்விலே கலந்தவனே -53

2.8K 71 6
                                    

பகுதி -53

வண்ணத்துப்பூச்சிகளாய் வெவ்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவமாணவி மணிகள் தோழர்தோழியர்களாக சேர்ந்து கேலி
கிண்டலோடு.. பல வண்ண சீருடைகள் அணிந்து பரபரப்பான பீளமேடு  சாலையோரத்தின் இருபக்கங்களிலும்... சுற்றி நிறைந்திருக்க...

இளவட்டாரங்கள் பெண்கள் ஆண்களையும்... ஆண்கள் பெண்களையும் கேலி கிண்டல் செய்து... அந்தந்த வயதுக்கே உரிய குறும்புகளோடு... துள்ளல்களோடும்... மாலை வீடு திரும்ப பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளிலும்... ஆட்டோக்களிலும்... செல்வதற்காக காத்திருக்கும் நேரத்தில் கவலையென்றால் என்ன தெரியாமல் அரட்டை கச்சேரிகள் நிகழ்த்திக் கொண்டு இருக்க...

ஒருவன் மட்டும் சற்றும் பொருந்தாமல் முகத்தில் உலகின் மொத்த இறுக்கத்தையும் குத்தகைக்கு எடுத்தவனாய்... கல்லூரி வளாகத்திலிருந்து வாகனத்தை எடுத்து சாலையோரமாக நிறுத்தியவனாய்... அரைமணிநேரம் கடந்தும் வந்து சேராத தன் நண்பனை நல்ல நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தவனின் கவனத்தை ஈர்த்தாள்... அந்த சிறுமி... இல்லை மடந்தைன்னு சொல்லலாம்.. பதினென்களில் இருப்பது போல் இருந்தாள்...

சாலையில் இருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாதவளாய்... சுற்றிசுற்றி அவள் விழிகள் ஓய்வின்றி அலைபாய்ந்து விளையாடிக் கொண்டிருக்க... எதை தேடிகிறாள்... இல்லை யாரை தேடுகிறாள் என்றால் அவளிடத்திலேயே பதில் இருக்காது...   இவனுக்கு எங்கே தெரியும்...

கள்ளமில்லா முகத்தில் இருக்கும் ஆர்வம்... அவனையும் அவள் வசமிழுக்க... ஒரு பெண்மணி அவள் பின்புறமாக வந்து தோள் தொட்டதும்... துள்ளி நகர்ந்தவளை ஆசையுடனே வருடியது சஞ்சயின் கண்கள்...

" ப்பூ..ப்பூ.. ம்மா.. ஏன்ம்மா...  பயமுறுத்துற..." என்று செல்லக் கோபத்தோடு தாயிடம் சண்டையிட்ட கலைக்கும் தன்னையே ஒருவன் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது அறியாதவளாய்... சிறுமி போல் நடந்துக் கொண்டிருந்தாள் .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora