உணர்விலே கலந்தவனே - 4

2.8K 62 0
                                    

அவன் முகத்தில் வழிந்த புன்னகையில் உள்ளம் உவகை கொண்டாலும் விஜய்க்கு சஞ்சயை காண்கையில் புதிதாய் தெரிந்தான் என்றே சொல்லலாம்...

பார்வையில் மின்னல் மின்ன தன் நண்பனை அளவெடுத்தது அவனது விழிகள்... கைக்குள் அடங்கமறுக்கும் அடர்ந்த கார்வனமாய் கேசமும் , பெண்களுக்கு மட்டும் அல்ல... ஆண்ணிற்கும் அடர்ந்த திருத்தமான புருவம் அழகு கூட்டும் என்னும் விதமாய் அமைந்திருக்கும் புருவமும்‌... , என்றும் கூர்வாளாய் இருக்கும் கண்களை ஓய்வெடுக்கும் படி உத்தரவிட்ட இமை கூட அக்கணம் மிக அழகாய்... நேர்நாசியும்... இவனது கம்பீரமே என்னால் தான் என்று பறைசாற்றிய படி வீற்றிருந்த அடர்ந்த மீசையும் in... ஆணுக்கு ஆணே பொறாமை கொள்ளும் அளவிற்கு சிவந்திருந்த இதழ்களை மறைத்த படி இருக்க ...அவனது அகன்ற தோள்களும் ஒட்டிய வயிறும் இறுகிய கைகளும் உரைத்தது நான் உடற்பயிற்சி பிரியன் என்பதனை...அவனுடைய நிறமோ செழுமையை எடுத்துக்காட்டும் விதமாய் அமைந்திருக்க...எல்லாவற்றிற்கும் மேலாக அவன் இதழ்களில் குடிக்கொண்டிருந்த புன்னகை ... அதில் மேலும் மெருகேற்றியவனாக.... இருப்பதை குறித்துக் கொண்டது விஜயின் மூளை . இவனுக்கு சிறுவயது முதலே... சிரிப்பு என்பது ஆச்சரியமென்றால்... கடந்த சில வருடங்களாக அதுவும் அபூர்வமாகியது... ஏன் மறைந்தே போயிருந்தது... என்பதை நன்கு அறிவான் . இந்நிலையில் , உறக்கத்தில் புன்னகையை ஏந்தி இருப்பது... உலக அதிசியங்களில் ஒன்றாகவே எண்ணத் தோன்றியது . இந்த அளவிற்கா ஷாக்க்ஷிதா... இவன் மனசுல இடம் பிடித்துள்ளாள்... என்ற சிந்தனையுடன் அவனருகே படுத்தவனுக்கு அறிய வாய்ப்பில்லை சஞ்சயின் கனவில் வம்பளந்து கொண்டிருந்தவள் கலை என்று...

மறுநாள் காலை நான்கு மணிக்கே ,  எழுந்து 4.45 க்கு அண்ணாநகரில் இருந்து கேப் புக் செய்து... இருள் விலகாத அந்த அதிகாலை பொழுதின் ரம்மியத்தை உணராதவளாய்... இனிமையாய் இசைத்த குயில்களின் ஓசை செவியை தீண்டியதை இரசிக்க மனமற்றவளாய்... காரின் பின் இருக்கையில் தன் மகனுடன் அமர்ந்து... குளிர்ந்த காற்று முகத்தில் மோத... மஞ்சள் விளக்கொளியில் மிளிர்ந்த சாலையில்... வாகன நெருக்கடிகள் இல்லாமல் வெறிச்சோடி... அவள் மனம் போலிருக்க‌..சுகமான மெல்லிசை பாடல்கள் ஒலிப்பதை  கவனியாதவளாய் அவள் வீற்றிருக்க..... காற்றை கிழித்து வேகமாய் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்தடைந்தது அவள் பயணித்த வாகனம்... ஒருவாறு , ஸதாப்த்தி எக்ஸ்பிரஸில் 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து தாயும் சேயும் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள் .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora