பகுதி - 26
அன்று மாலை அலுவலகத்தில் இருந்து... வந்த கீர்த்திக்கும் தேவ்வை பற்றிய கவலையில் ... அவனது அறைக்குள் நுழைய... அங்கே கண்ட காட்சியில்... ஏழு உலக அதிசியங்களில் எட்டாவது அதிசயம் அங்கே இருப்பது போல் தாய் சேயின் செயலை பார்த்து வாசலிலே நின்றாள் ... கலை முதலில் பார்க்க... பல நாட்களுக்குப் பிறகு உயிர்ப்புடன் இருந்த சிரிப்பை பார்த்தவளுக்கும்... மகிழ்ச்சியாகவே... இருந்தாலும்...
" என்னடா... நடக்குது இங்கே..."
கங்காரு குட்டி போல் அவளது மடியில் அமர்ந்து... முத்தம் பதித்து... இருவரும் விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் கீர்த்தி கேட்க...
" ம்..ம்.. பாத்தா தெரில... விளையாடுறோம்.." என்று நக்கலாக பதிலளித்து... கலையைப் பார்த்து கண்ணடித்தவனை...
" நீ ஏன்... பேச மாட்ட... பாவம்... உடம்பு சரியில்லாம... பயபுள்ள இருக்குதேன்னு... அவசர அவசரமா வந்தா... நீ... நக்கலடிக்குற... ம்ம்..." என்று கூற..
" யாருக்கு அத்த... " என்றான்... தேவ் ..
" அதானே.. யாருக்கு உடம்பு சரியில்ல கீர்த்தி.. " என்று மகனுடன் இணைந்து கொண்ட கலையை பார்த்து கையால் வாய் பொத்தி தேவ் சிரிக்கவும் ... வேகமாக... கோபத்தோடு வெளியே செல்ல திரும்பியவளை...
" ஹேய்... கீர்த்தி.. " , என்று அழைக்க... முறைப்புடன் திரும்பியவளிடம்...
" அது இல்லை அத்த... நம்ம... வீட்டுல.. பெட் ஸாஃப்டாவே இல்லையா.,.. அதான் இங்க வந்துட்டேன்... " என்று ஹேஃபை கொடுக்க... கீர்த்தியின் பின்னே நின்றிருந்த... டாக்டர் கிருஷ்ணன் வாய்விட்டே சிரித்த சத்தத்தில்... இருவரும் எழ...
நான்கு நாட்களுக்கு முன்னே இருந்தது என்ன... இப்போது அடிக்கும் லூட்டி என்ன... என்று கீர்த்தியுடன் சேர்ந்து அவரும் நினைக்காமல் இல்லை .
அவனை பரிசோதித்தவர்... நாளை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று கூறி விடைப் பெற்றதும்... பழைய கலகலப்பும்... அந்த இடத்தில் நிறைந்து இருக்க...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...