பகுதி - 30
தனிமை என்பது சாத்தானின் உளைக்கலம் என்று மேதைகள் கூறுவது உண்டு... அதேபோல் தனிமையாக இருப்பவர்களால் அமைதியாய் இருக்க முடியாது... அதில் கலையும் விதிவிலக்கல்ல....
மனம் எங்கெங்கோ சுற்றித் திரிந்து.... அமைதியின்றி தவிக்க... கண்களை சுழலவிட்டவள்... அப்பொழுதுதான் அந்த அறையே கவனித்தாள்...மிகப் பெரிய படுக்கை... அதற்கு எதிரே... பெரிய டிவி... இடதுபுறமாக... சிறு இடம் அதில் நீளமான sofa முழுமையாய் இடம் பிடித்திருக்க ... இதன் தடுப்பு போல் பெரிய wattrobe... அதற்கு எதிர்புறத்தில் பாத்ரூம்... சிறு பால்கனி... என்று... மூன்று அடுக்கு குடியிருப்பின் அளவிற்கு அமைப்பு இருக்க... சிறு தூசி இல்லாமல் பளிச்சென்று இருந்தது... அந்த அறையின் அலங்காரப் பொருட்களிலும் பணத்தின் செழுமை...
இந்த செழிப்பும்... அவனுடைய பேச்சுக்களும் கலையை திணறடிக்க... அனைத்தும் கையை மீறிய உணர்வு... இனி தன்னால் தேவ்விடம் நெருங்க முடியுமா... என்ற நினைப்பே... அவளுள் இந்த இடத்திலோ... அவனிடமோ... அவள் அறியாமலேயே ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது...
அதிகம் யோசிப்பதால் மூளையின் வெப்பம் அதிகரிக்க... ம்ஹூம் சரிவராது... பேசாம தூங்கலாம் என்று மெத்தையில் படுக்க நினைத்தவளுக்கு... என்ன உரிமை இருக்கு... என்று கேட்டு விடுவானோ என்ற பயம் பிறக்கவும்... என்ன செய்ய... என்று நெற்றியை பிடித்து நின்றவள்... அவன் தோள் சாய நினைக்கும் மனதை என்ன செய்ய என்று தெரியாமல் தடுமாற... நடக்கறது நடக்கட்டும் பாத்துக்கலாம் என்ற எண்ணம் வந்ததும்...
அந்த நீளமான sofa விலேயே படுத்து உறங்கிவிட்டாள் . மனைவியை விட்டு வந்தவன்... இரு சக்கர வாகனங்களுக்கு... இந்தியா மட்டுமல்லாது உலக அளவில்... உதிரி பாகங்களை தயார் செய்து கொடுக்கும் தொழிற்சாலைக்கு செல்ல... முக்கியமான புதிய உற்பத்தியில் நிறுவனம் ஈடுப்பட்டிருந்ததால்... இன்றய கிளையண்ட் மீட்டிங்கில் அவனும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயமானதால்... வந்ததிற்கான வேலையில் மூழ்கிவிட... வேலை நெட்டித் தள்ளியது... நள்ளிரவை தாண்டி வந்தவன்... கலையை பார்க்க... அதில் உறங்கி இருந்தாள் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...