உணர்விலே கலந்தவனே - 41

2.5K 66 4
                                    

பகுதி - 41

நிகல் அவள் இருக்கையில் அமர்ந்த உடனேயே தன் உயரத்திற்கு ஏற்ப… நாற்காலியின் உயரத்தை குறைத்துக் கொள்ள… அப்படியும் அவன் முகம் நிற்கும் அவள் உயரத்தில் இருந்து பெரிதாக வெல்லாம் கீழ் இறங்கவில்லை . அவன் விரல் அலட்சியமாக ஏதோ ஒரு கீயை தட்ட… பாஸ்வோர்ட் கேட்டு சிரித்திருந்தணது அவளது கணினி…

இப்பொழுது நிதானமாக தன் கூலர்சை கழற்றி… மேஜையில் வைத்தவன்… ம்… என்றான் .

அதில் புரியாமல் திகைத்து… என்ன… என்று சத்தத்திற்கு பஞ்சம் ஏற்பட்டவளாய் கேட்க… வேண்டுமென்றே மராத்தியில்… பேசினான்… கள்வன் பாஸ்வேர்டு என்பதையும் ஆங்கிலத்தில் சொல்லாமல் குறுஞ்சிரிப்பை மென்று முழுங்கியவனாக பேச...  சுற்றியிருந்த அனைவரும் இருவரை மட்டுமே வேடிக்கை பார்க்கையில்… கண்களில் விஷமத்தை ஏற்றி நடந்து கொள்வதில் தடுமாறியவள்… பரிதாபமாய் ஏறிட… பெண்கள் சிலர் கேலியாக நகைத்துவிட்டார்கள்…

பாவமாய் பரத்தை பார்க்கவும்… பாஸ்வோர்ட்‌‌… ஓபன் பண்ணிக் குடு கலை… என்று வேண்டுமென்றே தமிழில் பேசினான்…

நிகிலின் விழிகள் சுவாரசியமாகவே அவனின் மீது படிந்து மீண்டதும்…

பாஸ்வோர்ட்… என்று முழிக்க…

வாட்… என்று அத்தனை ஸ்டைலாக...

" எப்படி… கொஞ்சமாச்சு நகந்தாதானே டைப் பண்ண முடியும்…"  என்று நினைத்தவளாய்… நெருங்க… தள்ளி போங்க என்று சொல்லவும் தைரியம் இல்லை.. அதே சமயம் நெருங்கி குறுக்க கையை வைத்து டைப்படிக்கவும் முடியவில்லை… அவனுக்கே உண்டான சுகந்தம் நாசியை தீண்ட… உள்ளுக்குள் பெரிதும் தடுமாறினாள்.

வந்த பொழுது எப்படி முகத்தில் எந்த உணர்ச்சிகளும் தெரியாதவனாய் இருந்தானோ… அப்படியே மற்றவர்களுக்கு தெரிய…  ஆனால் அவன் விழிகள் அவளுக்கு மட்டுமாக சொன்ன சேதியோ வேறாக இருந்தது…

அவனுடைய மூச்சு காற்று தன்  மேல் வீச… கூசி சிலிர்த்த மயிற்கால்களை என்ன செய்வதென்ற புரியவில்லை… அவனை பார்த்தாலோ... அதுவும் மிக அருகில்.‌.. நெருங்கி இருந்தாலோ... அவள் நடுக்கத்திற்கு ஓய்வென்பதே இல்லாமல் போகும்... பயங்கரமாக அதனிடத்தில் வேலை வாங்கிவிடுவாள்...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ