உணர்விலே கலந்தவனே - 52

2.7K 68 13
                                    

பகுதி - 52

மல்கோத்திராவிற்கு தன் மகள் செய்த காரியங்கள் முதலில் தெரியாமல் போனாலும்... தெரிந்த பிறகு வெட்கப்படாமல்... புலிக்கு பிறந்தது பூனையாகுமா... என்ற மிதப்பில் கர்வமாகவே நினைக்கும் தந்தையாக இருந்தார். அவரை பொருத்தவரை அவள் பொறுப்பில் இருக்கும் நிறுவனத்தை திறன்பட நடத்துபவள்... பின் பப்.. கிளப்... பாய்ஸ் என்று கூத்தடிப்பதில் செலவு செய்பவள் என்றே எண்ணியிருந்தார் . ஆனால் அப்படி இல்லை என்பதை கலை விஷயத்தில் நிரூபித்திருக்க... மனதில் மகளை மெச்சிக் கொண்டார் . அதுவே அவளை வெளியில் எடுக்க பெரிதும் பாடுபட... ஒவ்வொரு முறையும் தோல்வியே தழுவியது... அதன் காரணத்தை அறிந்து பொங்கி எழுந்துவிட.. மதங்கொண்ட யானையின் காலுக்கு அடியில் மிதிப்பட்டுக் கிடந்தார் . கழுத்தில் கால் பதித்திருந்தவனை கண்டதும் வெடவெடத்தவர்... .

" ந..நரேன்... " என்று குழற..

" எவ்வளவு தைரியம் இருக்கனும் உனக்கு..." என்று கர்ஜிக்க

" இல்ல..இல்ல.. என் பொண்ணை காப்பாத்த... நான்..."
என்று பேச முடியாமல் முழிகள் பிதுங்கி வெளிவந்துவிடுவது போல் துடிக்க... அவருடைய பிஏ அங்கு வந்துவிட்டவன்.. கெஞ்சவும் நிதானத்திற்கு வந்த நரேன்... விரல் நீட்டி எச்சரித்து வெளியேறிவிட்டாலும் ... கோபம் அடங்க மறுத்திருந்தது...

சஞ்சயின் கோபம் முழுவதும் ஷாக்ஷித்தாவின் மீது மட்டுமே... அதனால் பெரிதாக இவரை கண்டு கொள்ளவில்லை... ஆனால் நரேனால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்பதே நிஜம்... தன் சோட்டி... கண்டிப்பில் தாயாய்.. அரவணைப்பில் சிறந்த தோழியாய்... குறும்பில் செல்ல சோட்டியாய்... என்று அவன் உலகத்தையே அழகாக மாற்றியவள்... சஞ்சயின் ஆதரவில்... எழுந்தான் என்றால்... கலையால் உயிர்ப்புடன் நடமாடினான் ‌. அதனால் அவ்வளவு எளிதாக ஷாக்ஷித்தாவின் செயல்களை மன்னிக்க முடியவில்லை... அதுவே மல்கோத்திராவின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கத் தொடங்க வைத்தது . அதனாலேயே... அவருடைய அலைபேசியின் தகவல்கள் உடனுக்குடன் வந்தடைய...  தன் சகோதரனின் மீது இருந்த வன்மம்... அவருடைய அடியாட்களிடம்   வார்த்தைகளாக வரவும்... எச்சரிக்கை விடுக்கவே அவருடைய இடத்திற்கு வந்தான் . ஆனால் அவன் இருப்பதை கவனியாது பேசிய பேச்சு... மீண்டும் கலையின் மீது கை வைப்பேன் என்று கூறியதும்.. செங்குருதி விழிகளில் ஓட.... விட்ட ஒற்றை அடியில் சுருண்டு விழுந்திருந்தார் .

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now