அங்கு நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கலை கூற....
" அப்புறம் என்னாச்சு… கலை… " என்று அதிர்ந்தவளிடம்…
" நிக்காம அவனை இழுத்துட்டு வந்துட்டேன்… ஏதோ… wedding function மாதிரி இருந்துச்சு…. "
" ஆமா… உனக்கு தான்... யாருன்னே தெரியாதே… அப்புறம் எப்படி அவன் அ..ப்பா...ன்னு…. சொன்னான்..." தன் சந்தேகத்தை கேட்க….
" நா செஞ்ச முட்டாள்தனத்துல… இதுவும் ஒன்னு…. அவனோட போட்டோவையே என் friendட்ட photoshop செய்து கொடுக்க… சொன்னேன்… ம்ச்சு… நா அப்பவே அங்கேயே பாத்து இருக்கணும் …. பெரிய தப்பு பண்ணீட்டேன்…. "
" ஏன்…. " என்பது போல் பார்க்க ... சென்னை மாலில் அன்று நடந்தது… மற்றும் சந்தித்தது… இருவருக்குமான வாக்குவாதத்தையும் சொல்ல… பட்டென்று எழுந்துவிட்டாள் கீர்த்தி…
" என்ன சொல்ற கலை... " , என்று விழிவிரித்தவளிடம் …" வீட்டுக்கு வந்துதான் பார்த்தேன்… ஆனா… தேவ்… நினைக்கவேயில்ல… இப்படியாகுன்னு…" என்று அழுகையில் குழுங்க…
" ஒரு… ஒருவேளை.., அவருதான்…. தே..வ்… அ..ப்...பா… வா…. இரு...ப்...பா..ங்...க..ளோ... " என்று தனக்கு தோன்றியதை யோசனையோடு வெளியிட….
" தெரியலையே கீர்த்தி .. வாழ்நாள்ல பாக்கவே கூடாதுன்னு… சொன்னவருக்கிட்ட… நான்.. எப்படி... கீர்த்தி… என் மனசு அவருதான்னு… அடுச்சு சொல்லுது… ஆனா புத்தி… தெரியாம… யோசிக்காதன்னு…. அடம்பிடிக்குது…. நா.. என்ன பண்ணுவேன்…. அவங்க… என்..னை… த..ப்...பா…. " என்று முடிக்க முடியாமல் கதற.….
தோழியை தோள் தாங்குவதை தவிர வழி இருக்கவில்லை கீர்த்திக்கு….
" நந்து இருந்திருந்தா…. நல்லயிருக்கும்… எனக்கு பயமா இருக்கு… கீர்த்தி.. தேவ்க்கு… நான்...வேண்டாமா…? பாக்கவே… பாக்காத… அவனோட அப்பாக்காக... என்னை…. ஒதிக்கீட்டான்ல… இரண்டு நாளைக்கு மேல ஆச்சு… என் முகம் கூட பாக்கல…. என்னால… தாங்கிக்கவே… முடியவில்லையே… இது..க்..காக..வா.. நா… இவ்...வ..ள..வு… கஷ்ட...ப்…" என்று மேலும் மேலும் தன்னைதானே வருத்திக் கொண்டவளை சமாதானம் செய்யும் மார்க்கம் புரியாமல்… கீர்த்தி இருக்க…
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...