உணர்விலே கலந்தவனே - 51

2.6K 61 4
                                    

பகுதி - 51

அன்றைய நிகழ்விற்கு பிறகு... கலையை நெருங்கும் வழி தெரியாதவனாய் சஞ்சய் தடுமாற... கணவனிடம் நெருங்குவதற்கு தடையாக அவள் குற்றணர்ச்சியில் தடுமாற என்று இருவரும் தாமரை இலை நீர் போல் நாட்களை கடக்க... அதற்கு முற்று வைப்பது போல் ஒரு நிகழ்வு நடந்தேறியது... 

கீர்த்தியோ... நந்தனின் பரந்து விரிந்த நெஞ்சத்தை மஞ்சமாக்கி.. தலை சாய்த்திருந்தவள்..

" நந்து... "

" ம்.. "

" நந்து... "

"ம்.. என்ன...

" நந்து..." மீண்டும் அவனின் மார்பில் கோலம் வரைந்தவளாய் அழைக்க...

"ம்ச்.. என்னடீ.."  என்று அதட்டல் போடதும் ... எழுந்து அமர்ந்தவள்...

"ஏன் நந்து இப்படி பண்றீங்க..." என்றாள் .

" நான் என்ன பண்ணினேன்.."  அவள் எதை கூறுகிறாள் என்று தெரிந்தே தெரியாதது போல் கேள்வி கேட்டவனை... முறைத்தவள்...

" எவ்வளவு மாமா கெஞ்சுறாங்க..‌ நாம நம்ம வீட்டுக்கு போனா என்ன‌..." என்றாள் .

" இப்ப எங்க இருக்கோம்..." முகத்தில் எப்பொழுதும் போல் எதையும் வெளிப்படுத்தாதவனாய் கேட்கவும்

" ம்ச்சு என்ன நந்து இது ... எதோ கோபம் இருக்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா நடந்துக்கறது... அவங்க பாவமில்லையா..." என்று தன் மொத்த இயலாமையும் வார்த்தைகளில் வெளியிடவும்...

" இல்ல..."  பட்டென்று பதில் அளித்து திரும்பிப்படுத்தவனை உலுக்கியவள்... 

"அத்தைக்காக வேண்டாம்... மாமாக்காகவாது போலாம் நந்து..." என்றாள் தன் பிடியை விடாமல்

" தேவையில்லை... "

" இவ்வளவு பிடிவாதம் ஆகாது உங்களுக்கு... நம்மல விட்டா வேற யாரு இருக்கா... ஒத்த புள்ளை பெத்துட்டு தனியா இருக்கணும் என்ன தலையெழுத்து... என்று பொறுமியவளை கண்டுக்காமல்...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora