பகுதி - 28
நந்தனை தேடி வந்த சியாமளா... மொட்டை மாடியில் அவன் இருக்கவும்... நெருங்கியவர்...
" என்ன முடிவுயெடுத்துயிருக்க... நந்தா.." , என்றார்...
நெற்றியை சுருக்கி.. அவர் கேட்பதை புரியாதவனாய்.... பார்க்க... அமைதியாய் அவன் முகம் பார்த்தவராய் நிற்கவே....
" என்ன சியாம்மா... புரியல " , என்றான்...
" ம்... எப்படி அவங்க... வாழ்க்கையை சரி செய்ய... போறேன்னு... கேட்டேன்... " , என்றார்..
பெருமூச்சை வெளியேற்றியவன்... "நா... என்ன செய்ய முடியும்..." கவலையோடு...
"அது உனக்கே நல்லா தெரியும் நந்தா... " , என்றவர்... " சஞ்சீ என்ன உன்ன கேட்டான்... கலை ஏன்... உன்ன தேடி வந்தா.. " , என்று அவரது கேள்வியில் வெடுக்கென்று திரும்பியவன்...
" அண்ணா... எங்கள சந்தேகப்படுறாங்களா...? " , என்ற கேள்வியில் அடக்கப்பட்ட கோபமே...
" அவன் அப்படி நினைச்சுயிருந்த... தாலி கட்டியிருப்பானா...?, என்று அவர் கேட்கவே... அமைதியானவன்...
" ம்ச்சு... எதையாவது புரிய மாதிரி பேசுங்க... நானே மண்ட காஞ்சு போய் நிக்குறேன்..." என்று எரிச்சல் மேலிட கூறியவனை...
"அவங்க இரண்டு பேருக்குள்ள ப்ராப்ளம் நிறைய இருக்கு... அதுல ஒரு குழப்பமா... நீயும் இருக்காதன்னு சொல்றேன்... " என்றார் மிகத் தெளிவாக...
" அவங்க பிரச்சினைக்கு நடுவுல ஏன் என்னை இழுக்குறீங்க.... " என்று கேட்டாலும் சுருதி இறங்கியிருக்க....
" உன்னை தேடி அவ வராம... இருந்திருந்தா... அவ வந்ததுக்கான காரணம் சஞ்சீக்கு தெரியாமாயிருந்திருந்தா.... உன்கிட்ட... அப்படி ஒரு கேள்வி அவன் கேட்காம இருந்திருந்தா..." என்று அவர் கூறவும்...
அந்த இருட்டிலும் பளபளத்த அவன் கண்களை கண்டு கொண்டவர்... அவன் கரம் பற்றி... " இந்த நிமிஷம் வரைக்கும் என் பையன் அவன் நட்புல ... தோத்து போகல... இனிமேலும் அவன் தோக்கக் கூடாதுன்னு.... நா நினைக்கிறேன்..."

CZYTASZ
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romansதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...