பகுதி - 21
நிதின்... தந்தையின் அணைப்பினாலும்... தாயின் தொடுகையினாலும் நெகிழ்ந்திருந்தவனின்... கரங்களோ லாவகமாக... ஸ்டீயரிங்கை வளைத்து... கார் ஓட்டிக் கொண்டிருக்க... அலைபேசியில் அழைப்பு வந்தது... ஷாக்க்ஷிதாவின் காலர் ஐடியை காணவும்... அழைப்பை ஏற்றவன்... சிறிது நேரம் உரையாடிய பின் வைத்திருந்தான்.
தன் மனதில் இருந்த குழப்பங்கள் யாவையும் ஒத்தி வைத்தவனாக.... இன்றைய விழாவிற்கு தயார் ஆனாலும்... முணு... முணுத்த... அவளது நினைவுகளை புறந்தள்ளுவது என்பது பெரும் சவாலாகவே..... அவனுக்கு இருக்க...
ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் , தன்னை வேலையில் மூழ்கடிக்க நினைத்து... அதில் வெற்றி கண்டவனாய்.... நட்பின் அடிப்படையில் மட்டுமாகவே வாங்கிய இந்த டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்கு.... அனைத்தில் இருந்தும் தப்பிக்கும் வழியாகவே... இன்று... வந்தான்...
அதிக கவனம்... இதில் செலுத்தாத போதும்... நிர்வாகத்திலோ... தொழிலிலோ... அலட்சியம் காட்டவில்லை.... இந்த தொழிலுக்காக ... நேரத்தை ஒதிக்கிக் கொள்ளாவிட்டாலும்... கிடைக்கும் நேரங்களில் இங்கு வராமலும் இருப்பதில்லை .
சில கோடிகள் பெறுமான உள்ள... இந்த தொழில் ஷர்மாவின் குடும்பத்தினாருக்கு... பெட்டிக்கடைக்கு நிகரானதே...
இந்த ஸ்டோரை வாங்கிய.. இத்தனை மாதங்களில்... இதுவரை மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே வந்திருப்பான் . ஆனால் அவன் வரும்பொழுதெல்லாம் கீர்த்தி மட்டுமே உடன் இருக்க... சென்ற முறை அவன் வந்ததிலிருந்து... கீர்த்திக்கு வேலை மாற்றப்பட்டிருந்தது... அதனால் அவன் இல்லாத நேரங்களில்... அவளது பொறுப்புகளும் கூடியிருக்க... வருமானமும் கூடியிருந்தது...
இதுவரை... அங்கு வேலையில் இருக்கும் ஊழியர்களோ.... நிர்வாகிகளோ... எவராயின் கீர்த்தியின் பார்வைக்கு வந்த பின்பே... அவனுக்கு அனுப்பி வைப்பாள் . அதேபோல் அப்பாய்ண்மென்ட் இல்லாதவரை... நேரடியாய்... யாராலும் அவனை பார்த்துவிட முடியாது...
VOUS LISEZ
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Roman d'amourதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...