பகுதி -31
அவளிடம் தோன்றிய மாற்றங்கள் அவனிடம் இல்லை போலும்... மிகவும் இயல்பாகவே... " என்ன பேச்சையே காணோம்... " என்று கேட்க.... அவனுடைய பேச்சில் சிலிர்த்தவள்...
" என்ன... என்ன... பெரிய காரணம்... இத்தனை வருஷம் நா பிரிஞ்சு இருந்த மாதிரி நீயும் இருன்னு.... கூடிட்டு போயிட்டாங்க... எங்கேயோ ... அ..ப்...பா... பலி வாங்க சொல்லியா தரணும் உங்க அண்ணனுக்கு... " , என்று குதர்க்கம் பேச...
" நீ அதை விடவே மாட்டியா.... உன்னால பிஏவா மாத்தினத மறக்கவே முடியாது போல..." என்று
விரிந்த புன்னகையோடு.. கேட்கவும்..." ஆ... பின்னே... அதெல்லாம் மறக்கற விஷயமா... நான் திட்டினத மனசுல வச்சுக்கிட்டு செஞ்ச வேலை தெரியுமா... லீவ்னு எழுதி பாக்ககூட உங்க அண்ணா எனக்கு நேரம் தர மாட்டேன்ங்கறார்..." என்றதும்
" அப்படியா... " என்று குறும்பு கூத்தாட கூறவும்... அதில் தடுமாறியவள் அதை அவனிடம் காண்பிக்காமல்.... மெல்லிய குரலில் "வர... வர... நீங்க கலையை யோசிக்கவே மாட்டேங்கறீங்க... அவ தேவாவை விட்டு இருக்கவே மாட்டா தெரியுமா ...? " என்று ஆதங்கமாக அவனிடமே அவளது குணநலன்களை சொல்லியவள் , ." காரணமாம்... காரணம்.." என்று வாய்க்குள் முனங்கவும்...
அவள் கரம் பற்றி மெத்தையில்... அவன் அருகே... அவளையும் அமர வைத்தவன்...
" நீ ஏன் அப்படி நினைக்கிற... உன்னுடை work pressure குறைச்சதா நினைக்கலாமே... இப்ப நீ hr ல இல்லதான... அவருக்கு உன்னுடைய work பிடுச்சிருக்கலாம்... நீ பேசனத வச்சு உன் சிரமம் புரிஞ்சதால... புரமோஷன் மூலமா... குறைச்சதா நினைக்க தோணலையா..." என்று வெகு நிதானமாக கேட்டான் .
" அது.. அது வந்து..."
" யாராவது நீ பேசுன வாய்க்கு புரமோஷன் குடுப்பாங்களா..."
" நா..நா.. அவர்கிட்ட உன்னும் பேசல..." என்று தடுமாறவும்... அதுவரை இயல்பாக இருந்தவனின் மனதில் சிறு தடுமாற்றம்...
செம்மை ஏறிய முகத்தில் துடிக்கும் இதழ்களை அருகே கவனித்ததும்... அதன் துடிப்பை அடிக்கிவிட ஆசை... அதன் விளைவாக.. அவளை மேலும் நெருங்கி அமர்ந்தவன்...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...