அனைவருக்கும் வணக்கம் ,
ஹி ஹி ஹி....ரொம்ப ஃபார்மலா இருக்கா , பரவால்ல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நண்பர்களே.....
மூன்று எழுது வார்த்தைக்கு எப்பொழுதும் வீர்யம் அதிகம் .
அது ' முதல் ' என்ற முதன்மையான சொல்லாகட்டும் . நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான ' காதல் ' என்ற வார்த்தையாகட்டும் , இல்லை 'அன்பு ' , ' பாசம் ' , 'களவு' ,
'கற்பு ' இப்படி பல .... அதுக்கு பவர் ரொம்ப ஜாஸ்திங்க .முதல்முதலாக தன் கருவறையில் இருந்து வெளிவரும் பிள்ளையை தாயவள் காண்கையில் ஏற்படும் பூரிப்புடனும் , பள்ளிக்கு தன் மகனையோ மகளையோ அனுப்பும் தாய்க்கு இருக்கும் மகிழ்ச்சியுடனும் , தன் முதல் நாள் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு இருக்கும் படபடப்புடனும் இத்தளத்தில் எனது முதல் எழுத்தைப் பதிக்கின்றேன் .
நான் படைப்பாளியும் அல்ல... எழுத்தாளரும் அல்ல...நாம் படிக்க மட்டும் அல்லாமல் எழுத தூண்டும் வகையில் அமைந்த இத்தளத்தில் என் கற்பனைக்கு.. உளி கொண்டு செதுக்கி.... சிலையாய் உருமாற்றி , அச்சிலைக்கு உயிர் கொடுத்தால் என்ன என்று தோன்றியது...
அதனால் எனக்கே எனக்கான நேரமாக அமைத்து ... உணர்விலே கலந்தவனோடு வந்திருக்கிறேன் .
பிறந்த குழந்தையின் முதல் அடி என்றெண்ணி என்னுடைய கதையில் பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன் .
"ஒருவர் உள்ளத்தை ஒருவர் கவர்தலாம்.கற்புக்கு முற்பட்டது களவு என்பது தமிழ் நெறி.பிறர்க்கு உரிமைப்பட்ட ஒன்றை அவரறியாமல் கவர்ந்து கொள்வதே களவாம்.
களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும்.
களவுக்குக் கற்பு இன்றியமையாதது. தமிழர்களின் வாழ்வில் களவு கற்பாவதே முழுமை பெறும் என்று மிக அழகாக தமிழ் இலக்கிய நூலான அகநானூற்றில் காணலாம் ."
கதையைப் பற்றி கேட்டா... அகநானூற்றின் விளக்க உரையை எதில் இருந்தோ எடுத்து பதிவிறக்கம் செய்து இருப்பதைப் பற்றி நீங்க என்னிடம் கேட்பது நன்கு புரிகிறது .
நான் மேலே குறிப்பிட்டதே நம் கதையின் கருவைப் பற்றி தான்...ஹான்... சிம்பிளாவும் சொல்லிறேன்.... இது காதல் கதை தாங்க... ஸ்பெஷலா இல்லையானு நீங்கதான் சொல்லணும்...
தலைப்பு - உணர்விலே கலந்தவனே.
தலைவன் அதாங்க நம்ம ஹீரோ - சஞ்சய்
தலைவி நம்ம ஹீரோயின் - கலைவாணி.
நான் படித்ததில் மிகவும் பிடித்தது உண்மையானதும் கூட " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும் " . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை...
சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம்.நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் .
கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை.
நன்றி
கனி .

STAI LEGGENDO
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Storie d'amoreதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...