உணர்விலே கலந்தவனே - 44

2.3K 60 4
                                    

பகுதி - 44

எப்பொழுதும் போல் அலுவலகத்திற்குள் நுழைந்தவள் பரத்தை தேட... மதியம் வரையும் அவன் வந்திருக்கவில்லை... மதுவை சாப்பிட கூப்பிட்டதற்கு... ஏனோ வரவில்லை என்று கூறிவிட்டாள்... சரி என்று தனியாக கேன்டீன் சென்றவள்... காலையில் நடந்ததை எண்ணியவளாய்...

எப்பொழுதும் அவன் விழிப்பதற்கு முன்பாக எழுந்துவிடுபவள்... இன்று அவன் மார்பிலேயே அயர்ந்து தூங்கிவிட்டாள்... அதை அவனும் கண்டு கொண்டது.. கண் விழித்து பார்த்தவாறு இருந்ததில் புரிய... எவ்வளவு நேரமாக பார்த்து கொண்டிருந்தான் என்றும் தெரியவில்லை... அவன் கண்டு கொண்டதில் வெட்கம் மேலிட‌... உதடு கடித்து பேசாமல் எழ முயன்றவளை.... அமைதியாய் விலக விட்டவனின் பார்வை மட்டும் குட்டி போட்ட பூனையாய் சுற்றிய படி இருந்ததில்... மனம் காற்றில் பறக்க...  நினைக்கும் போதே இப்பொழுதும் உதடுகள் தானாய் விரிந்து...  வெட்கம் குடியேற வைத்தது...

தன் கணவனை நினைத்தே உண்டு முடித்தவள்... தங்கள் ஃப்லோருக்கு நுழைகையில்... கசங்கிய முகத்தோடு அமர்ந்திருந்த பரத்தை கண்டுவிட்டாள் ... அவனை அவ்வாறு பார்த்தும் ...

" பரத் என்னாச்சு.... ஏன் இங்க இப்படி நிக்குறீங்க..." என்று வேகமாக நெருங்கவும்... கையில் இருந்த வேலை நீக்கல் படிவத்தை காட்டி... முகம் மூடி அமர்ந்திருந்தான்...

அவனின் நிலை கலை அறியாதது இல்லையே... தன் சகோதரிக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்திருக்கும் இந்த நேரத்தில் ... அதுவும் ஆபீஸிலும் கடனுக்கு விண்ணப்பித்திற்க... கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நிலையில் இந்த வேலையே போய்விட்டது என்றால்... அதுவும் இல்லாமல்... கேம்பஸ் மூலமாக வேலையில் சேர்ந்தது முதல் இங்கேயை பணிபுரிந்து.. வளர்ந்து வந்துக் கொண்டிருப்பவனுக்கு... இத்தனை ஆண்டு காலங்களாக உழைத்த உழைப்பு அனைத்தும் ஒரு டெர்மினேஷனால் அழிந்துவிடுமே... அவளுக்கே இத்தனை பதற்றம் இருக்கும் பொழுது... அவனுடைய நிலையை... சொல்லவும் முடியுமா...

" பரத்...பரத்... என்னாச்சு பரத்... எ..து..க்காக... இந்த லெட்டர்..."  என்று கேட்டவளுக்கே துக்கம் தொண்டையடைக்க...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now