உணர்விலே கலந்தவனே - 27

2.3K 64 2
                                    

பகுதி - 27

சில மணித்துளிகள் கடந்து வந்தவன் ... டிரைவர் இருக்கையில் அமர்ந்து ... தன்னவளை பார்க்க... கலைத்தவளாய் மகனது முகத்தை மட்டுமே பார்த்தபடி இருந்தாள்... மீண்டும் அவள் நனவுக்கு வந்தது என்னவோ... இறங்கு என்று அவனுடைய குரல்‌‌... அருகில் கேட்ட பொழுதுதான்...

மருந்தின் விளைவால் நன்கு உறங்குபவனை தூக்க முடியாமல் தடுமாற... இரு என்று அவள் மடியில் இருந்து எடுத்து தன் மகனை தோளில் போட்டவன்... அவளை பார்க்க... கால்கள் மரத்திருந்ததால்.... நடக்க முடியாமல் தடுமாறியவளை ...

"என்னாச்சு..." என்றதும்...

ஒன்னுமில்லை... என்பது போல் தலையை மட்டுமே அசைக்க... "வா...", என்றதோடு சென்றுவிட... கண்ணீர் விழுந்துவிடாமல் தடுமாறியவள் அமைதியாய்... அவன் பின்னே செல்ல...

அவர்களை பார்க்கவே அத்தனை பாந்தமாய்...
மூவரையும் வாசலிலே நிற்க வைத்தவர்... பெரிய தட்டில் மஞ்சள்.. குங்குமம்... பூ... மற்றும் சக்கரையும்... அதனுடன் சிறு தீபம் ஏற்றியிருக்க...

அதில் இருந்த மஞ்சள் குங்குமத்தை இருவரது நெற்றியில் வைத்து... மலர் தூவி... ஜான்வி ஆரத்தி எடுத்த பின்... சக்கரையை இருவருக்கும் கொடுத்தவர்... நிலைப்படியில் ஒரு கலசத்துடன் அரிசி நிறைந்திருக்க... அதை வலது கால் கட்டைவிரலால் வீட்டின் உள்ளே தள்ளி வருமாறு கூறவும்... கலசத்தையும் அதில் இருக்கும் அரிசியையும் பார்த்தவள்.... தயங்க‌...

அங்கிருக்கும் ஏற்பாட்டில்.... அழுத்தமாக... சியாமளாவை ஏற்றிட்டவன்... அமைதியாய் நின்றுவிட்டான்... அரிசியை மிதிப்பதா.‌.. என்று அவளது தயக்கத்தை தவறாக புரிந்து கொண்டு... பல் கடித்து ,

" பேசாம உள்ளே வா... சீன் கிரியேட் பண்ணாத... " என்று கூறியதும் ,

சட்டென்று நீர் மறைத்த விழிகளில் இருந்து விழுந்து விடாதவாறு கண்சிமிட்டி உள்ள அடைக்கியவளுக்கு... அப்போதும் , தைரியமாக அவர்கள் கூறுவதை செய்ய முடியவில்லை...

பின்னே... அரிசி கீழே கிடந்தாலும்... மிதிப்படாமல் கைகளால் மட்டுமே எடுக்க வேண்டும் என்று கேட்டு வளந்தவளை... கால்களால் தள்ளிவிடு என்றால் சட்டென்று எப்படி செய்வாள்....அதுவும் கலசத்தில் இருப்பதை.... இது... அவனுக்கு புரியாத போதும்... சியாமளாவிற்கு புரிந்திருக்க...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now