உணர்விலே கலந்தவனே - 32

2.2K 65 2
                                    

பகுதி- 32

நந்தனின் மனமும் மனைவியிடம் கூறாவிட்டாடலும்... அன்று நடந்ததை... அவளை தன் நெஞ்சத்தில் தாங்கியவனாய்... அமைதியாய் அசைபோட...

சியாமளா அவனிடம் பேசி சென்றபின்... சிறிது நேரம் கழித்து கீழ் இறங்கிய நந்தனுக்கு நிகிலின் அறையில் சத்தம் கேட்கவும் வேகமாக... அங்கே விரைந்தவனை வரவேற்றது பாலாவின் குரல்...

" டேய் விஜி அவன் என்னடா நினைச்சுட்டு இருக்கான்... இப்ப எதுக்காக அந்த பொண்ணை ... பூனேக்கு பேக் பண்றான்..."  என்று கோபமிகுதியில் விஜயிடம் கேள்வி கேட்க...

அமைதியாய் தன் வேளையிலேயே கவனமாக இருந்த நிகிலை  பார்க்க பார்க்க .... பாலாவிற்கு ஆத்திரம் அதிகரித்தது...

" டேய்... என்னப் பாத்தா கேணப்பய மாதிரி இருக்கா உனக்கு... நான் கேட்டுகிட்டே இருக்கேன்... நீ உன் வேலைய பாத்தா... என்னடா அர்த்தம்..." என்று நேரடியாக நிகிலிடம் கத்தவும்...

நிதானமாக லேப்டாப்பை மூடியவன்... " நீ என்னை கேட்டியா இல்லை விஜயை கேட்டியா... " என்று நிறுத்தி நிதானமாக வினவ... வாய் பிளந்து நின்றான் பாலா...

தன்னை சமன் செய்து கொண்டு..."சரி உன்னையே கேக்குறேன்... எதுக்காக கலைய மட்டும் பூனேக்கு அனுப்பனும்னு நினைக்கிற.... "

அமைதியாய்... இது என்ன கேள்வி என்பது போல் அழுத்தமாக பார்க்க..."டேய்... மனுசனாவே இருக்க மாட்டேன் பாத்துக்க... உன்னோட  கோவைக்கோ... ஊட்டிக்கோ... வந்தா... நா ஏன் பேச போறேன்.."  என்றதும்

" அப்பா அம்மா அங்கேயா இருக்காங்க... " என்று பவ்வியமாக நக்கலாக அவனையே கேட்கவும்..

" ஆமாண்டா நல்லவனே... நீ ரொம்ப அவுங்கள நினைக்கிறவன்தான்..." எனவும்...

" அதுனால தான்டா... அவ அங்க போகப் போறா..."  என்று கூறினாலும்..." நீ ஐபிஎஸ் பாஸ் பண்ணியா இல்லையா..." என்று கிண்டல் அடிக்க...

" போதும் சஞ்சய்... அவன் என்ன கேக்குறான்... நீ என்ன பேசுற... " , என்றும் தன் நண்பனை கொண்டாடும் விஜயின் குரலில் உஷ்ணம் தெறிக்க...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin