" டேய்..நந்து உனக்கு சஞ்சய் ன்ற பேர்ல யாராவது... உன் ஃப்ரெண்ட்ஸ்... இல்ல... நல்ல பையனா தெரியுமா ?.."என்றாள் கலை . அவள் கேட்ட நொடி மின்னி மறைந்த அவனின் நினைவை புறந்தள்ளி..." ரொம்ப நாள் கழிச்சு ஃபோன் பண்ணியிருக்கோமே... எப்படிடா இருக்கன்னு.... கேக்காம...எவன் பேரையோ சொல்லி என்கிட்ட கேக்குற..." என்று கடித்து துப்பினான் நந்தன் எட்டு வருடங்களுக்கு முன்பு .
"ஹா...ஹா... நீ தான் என்கூட job join பண்ணல.. நானா ...உன்னை மறுபடியும் படிக்க சொன்னேன் ...."
" ம்...ம்...அது சரி... எதுக்கு இப்ப இந்த விசாரணை ...." என்றவனுக்கு ,
அதே உற்சாகம் குறையாமல் "கல்யாணம் பண்ணிக்க தான்..." என்றாள்.
" எ..ன்ன...! " ,என்ற அவனின் அதிர்ச்சியை அலைபேசியின் வழியாக அறியவில்லை அவள்....
"ம்...அப்பா அம்மா மாப்பிள்ளை பாக்குறாங்க... நான் strict ஆ சொல்லிட்டேன்... எனக்கு சஞ்சய் தான் மாப்பிள்ளையா வேணும்னு... I mean அந்த பேர் யாருக்கு இருக்கோ அவுங்க தான் வேணும்..ஏனோ...என்னனு தெரியல.. மச்சீ... என..க்கு அந்த பேர் மேல ஒரு craze.... so....நீயும் சேர்ந்து எனக்கு ஹெல்ப் பண்ணு...ஏன்டா... நீங்க எல்லாம் dream girl அது இதுன்னு சொல்லி திரியிரீங்க... நான் மட்டும் ஆசை படக்கூடாதா...மொளைக்கவே இல்ல என்கூட பொறந்தது...ஆனா அவனுக்கு வர பொண்டாட்டி இப்பிடி இருக்கணும்... அப்படி இருக்கணும்னு... பெனாத்துறான் நான் இதுகூட சொல்ல கூடாதா...? நீயே சொல்லு... " என்று மூச்சு விடாமல் பேசியவளின் வார்த்தைகள் ஏதும் அவன் மூளையில் பதியவேயில்லை...
" நான் அப்புறமா.. பேசுறேன்..." , என்று குரல் கறகறக்க கூறி பதிலை எதிர்பார்க்காமல் வைத்திருந்தான் .
மூளை மரத்து போயிருக்க...சிலையாய் அமர்ந்திருந்த நண்பனை பார்த்ததும் , " டேய்... டேய் நந்தா...." என்று அவனது தோளை குழுக்கினான் பரத் . ஏனெனில் நண்பனின் காதல் பற்றி முன்பே அறிந்திருக்க...சமாதானம் செய்யும் விதமாய் " நீ அவங்கட்ட எதுவுமே சொல்லாம இப்ப freeze ஆனா என்ன அர்த்தம் ...முதல்ல போய் propose பண்ணற வழிய பாரு அதைவிட்டு இதுக்கே உக்காந்துட்டா என்ன பண்றது....? "

ESTÁS LEYENDO
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...