உணர்விலே கலந்தவனே - 25

2.3K 64 4
                                    

பகுதி - 25

மாதங்கின் மடியில் சரிந்த கீர்த்தியோ அமைதியாய் விழிகளில் நீர் வழிய படுத்திருக்க... அவளது தலையை கோதினாரே தவிர என்ன என்று கேட்கவில்லை . மொத்தத்தில் அனைவரின் மனதும் கனத்தே இருந்தது . அவரவர் அன்றய தினத்தின் நடந்தவற்றில் மூழ்க....

கலை திணத்த‌.. அந்த காகிதத்தை படித்து முடித்தவுடன் அதிர்ந்து போன... நந்தன் வேகமாக மேலேறி... கதவை தட்டினான்... இல்லை உடைத்தான்... கடந்த ஒவ்வொரு நிமிடங்களும்... யுகங்களாக மாற...

மயங்கி சரிந்தவளை.. மெத்தையில் கிடத்தி நிமிரும் பொழுது... வேகமாக தட்டப்பட்ட கதவினை திறந்த நொடி... அறை வாசலில் சஞ்சய்யின் முன் மண்டியிட்டவன்... கையில் இருந்த கற்றை காண்பித்து...

"வேண்டாண்ண.., தாங்க மாட்டாண்ணா.... ப்ளீஸ்ன்ணா... " , என்று நீர்மல்க மன்றாடியவனை‌... இமைக்க மறந்தவனாய்... பார்த்திருந்தான் நிகல் .

அவன் இப்படி மண்டியிடுவான் என்று அங்கிருந்தவர்கள் யாரும் நினைக்கவேயில்லை... நந்தன் படிப்பதை பார்த்து... சற்று அங்கேயே தேங்கியவர்கள்... நந்தன் அழுதுபடி புயலாக மாடியேறியவும்... அவன் பின்னோடு வேகமாக பாலா , கவிதா.. மற்றும் கீர்த்தி பின் தொடர...

அவன் முன் மண்டியிட்டு மன்றாடிய நந்தனை காணவும் அதிர்ச்சியின் உச்சத்தில்.... அது கொடுத்த தாக்கத்தினால் ஒருவருக்கும் அவனை நெருங்க வேண்டும் என்ற எண்ணம் கூட எழாமல் உறைந்து நின்றுவிட... பின்னோடு வந்த பெரியவர்கள் வரை அதிர்ந்து போக...

ஏன்... நிகிலும் எதிர் பார்க்கவில்லை... இது எதையும் உணராத நந்தன்... அவன் பின்னே தெரிந்த கலையின் வதங்கிய தோற்றத்தில்..‌ மேலும் கலவரமூட்டப்பட்டடவனாய்...

" அண்ணா.. அவ.. எவ்வளவு கஷ்டப்பட்டா... தெரியுமாண்ணா... தப்பு தான்ண்ணா..‌ அவ உங்கட்ட பே..சா‌.ம வந்திருக்க.. கூடாது... தெரியாம பண்ணீட்டா‌.... ப்ளீஸ் .... பாவம்ண்ணா‌...", என்றது தான் தாமதம்‌...

" அப்ப நான்... நான்... பாவமில்லையா... சொல்லுடா...." என்று கீழே இருந்தவனை சட்டையை கொத்தாக பிடித்து நிறுத்தி வினவியவன்... தன் கொந்தளிப்பை அடக்க முடியாதவனாய்‌..

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now