வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்தபடி , " கலை..." ,
" ம் " ...." கலை...." ,
" என்ன "...."கலை..." என்று மீண்டும் சுரண்டியவளிடம் ," வண்டில வரும்போது இப்படி தொடாதேன்னு எத்தனை தடவை சொல்றது கேக்க மாட்டியா ? " என்று எரிச்சல் அடைந்தவளிடம் ,
" ஸாரி...ஸாரி .." என்று கூறி கைக்கும் வாய்க்கும் தற்காலிகமாக rest கொடுத்திருந்தாள் கீர்த்தி .வீடு வந்து இறங்கியதும் , " நீ போய் கதவை திற இதோ வரேன் ..." சாவியை கீர்த்தியிடம் கொடுத்தவள் .
" இந்தாங்க அம்மா வாடகை " என்று கூறி house owner-ரிடம் வாடகை கொடுத்து வந்தாள் . வீட்டில் relaxed ஆ அமர்ந்திருந்த தோழியை முறைத்தவாறே வந்தவள் , " உனக்கு அறிவுன்றது கொஞ்சமாச்சும் இருக்கா இல்லையா ? " என்று தனது மிக பெரிய சந்தேகத்தை கேட்டவளுக்கு ,
"எல்லாம் என் நேரம் " என்று வாய் விட்டே முனங்கியவள்... தான் சுரண்டியதற்கான காரணத்தை தொடங்கினாள் கீர்த்தி .
" ஏய் சும்மா கத்தாத ... அதான் ஸாரி சொல்லிட்டேனே.... ஆமா new MD வரும்போது நீ எங்க போன ..?" என்றாள் .
" ஏன் "... என்றவளிடம்..,
"எவ்வளவு tension ஆனாரு தெரியுமா ? "
ஒற்றை புருவத்தை மேல்தூக்கி ஏன் என்பது போல் பார்த்தவளிடம் ,
" என்ன மேம் பாக்குறீங்க.... இன்னைக்கு fullஆ நான் அவர் கூட தான் இருந்தேன் " ." ஓ.... என்னாச்சு ?"... என்றவளுக்கு ,
"என்னது ..? என்னாச்சா.... என்னாச்சு னு coola கேக்குற ... " மிகுந்த அதிர்ச்சியை வெளிபடுத்தினாள்....
" ம்ப்ச்... என்னாச்சு னு சொல்லு இல்லை ஆளவிடு.." என்று சளிப்புடன் கூறியவளை பார்த்த கீர்த்திக்கு " நீயேன் பேச மாட்ட" என்று இருந்தது .
" ஏய் ..என்ன நடந்தது தெரியுமா ?" என்று flashback modeக்கு சென்றவள் நம் கீர்த்தியேதான் .
காலையில் கலையிடம் உரையாடிய பின் கீர்த்தி அவளது அறையை நோக்கி சென்றாள் . அங்கு தலைமை அதிகாரியான வர்மா அழைத்ததாக உடன் பணியாற்றும் யஷ்வன் கூறியதை கேட்ட உடன் அவருடைய கேபினுக்கு விரைந்தவளிடம் வர்மா , "கீர்த்தி come with me " என்றார் . உடன் நடந்த படி " do u know that Ravi is off today " என்றார் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...