பகுதி - 35
தொழில் துறையில் முதல்... இரண்டு... மூன்றாம் இடம் என்று பீற்றிக் கொள்ளும் இவர்களை பிள்ளைகள் வளர்ப்பில் கணக்கெடுத்தால் சைபர் நிலையில் மட்டுமாகவே இருப்பார்கள் என்று கலை தன் உள்ளக் கொதிப்பை அடக்குவதற்கு பாடுபட்டவளாய் அறையில் நடை பயின்றவள்... சிறிது நேரத்தில் முடிவெடுத்ததும் கொதிப்படங்கியவளாய்...
ஜான்வி திருமணமாகி வந்த புதிதுலேயே.... நிகிலின் தந்தை பார்த்துக் கொண்டிருந்த தொழிலை பார்க்கவென.. அர்ஜூன் பொறுப்பேற்க... கணவன் மனைவி இருவரும் நீலகிரிக்கு அனுப்பப்பட்டனர்... ஜான்வி இங்கிருந்த கொஞ்ச நாட்களில் பெரியவர்களின் பிள்ளைகள் மீது அன்பு செலுத்தினாலும்... நரேன் மற்றும் நிதின் பள்ளி பருவத்தில் இருந்தே ஹாஸ்டலில் படித்து வந்ததால்... ஒட்டுதல் என்பது மிகவும் குறைவு... இந்திராதேவியிடம் பயம் கலந்த மரியாதையுடன் பிள்ளைகள் இருந்தாலும்... அவர்களுக்கு தேவை ஏற்பட்டால்... வேண்டியதை வீட்டு நிர்வாகியிடம் பெற்றுக் கொள்வதால்... பெற்றவர்களை பெரிதாக என்றுமே நினைத்ததில்லை... அதுபோல் அவர்களும் இருந்ததுமில்லை...
தமிழ்நாட்டில் இருந்து நிரந்தரமாக இங்கேயே வந்த பிறகோ... பெரிய மருமகள்கள் குடும்பத் தொழிலில் ஈடுபடாவிட்டாலும்...குடும்ப விழாக்கள்... பார்ட்டிகள்... மகளிர் சேவையென்று அதில் மூழ்கியிருக்க... தனக்கு பின்... தான் வளர்த்த தொழில் அழிந்துவிடக் கூடாது என்று இந்திராதேவி நினைத்து... இயல்பிலேயே ஜான்விக்கு இருக்கும் புத்தி கூர்மை... அமைதியின் பாங்கு... அவரை தொழிலுக்குள் இழுத்துக் கொண்டார் . நரேன், நிதின், மாயா மற்றும் அகில் இவர்கள் நான்கு பேரிடமும் அன்பு செலுத்தினாலும்... நிகிலிடம் இருந்த பிரியம் போல் இல்லை...
நரேனின் துயரத்தை அருகில் இருந்து பார்த்ததாலோ... என்னவோ அவன் கூறியதை கேட்டு அவரும் அக்குழந்தையிடம் ஒதுங்கி நடந்துவிட்டார்...
இரு வாரத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாதவராய்...
ஜான்வி கலையின் அறைக்கே சென்றுவிட்டார்... அவள் அறையில் இல்லாமல் போகவும் குழந்தையின் அறைக்கு விரைந்தார்.
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...