உணர்விலே கலந்தவனே - 17

2.2K 59 16
                                    

பகுதி - 17

எவ்வளவுக்கு எவ்வளவு முந்தைய நாளின் விடியல் சந்தோஷமாக தொடங்கியதோ‌... அவ்வளவுக்கு அவ்வளவு அந்த நாளின் முடிவு மாறியிருந்தது‌‌...

தான் மட்டுமல்லாது தன் மகனும் சேர்ந்து வதைபடுவதில் மிகவும் சோர்வடைந்திருந்தாள் .

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவனோ‌... தன் அன்னையின் முகம் காண மறுத்தவனாய் செயல்பட்டு... கீர்த்தியின் இல்லத்திற்கு சென்றுவிட்டான் . மகனின் பிடிவாதத்தை அறிந்தவள் என்றாலும் தற்போதைய அவனது உடல்நிலையை கருத்தில் வைத்து அங்கேயே விட்டு வந்து... அவளது இல்லத்தில் தனித்து நின்றது அந்த பேதை‌‌...

பெற்றோரின் படத்தின் முன் நின்று கதறியவளின் கதறல்... தாங்க முடியாததாய் இருக்க... அப்படியே மடிந்து... மயக்கத்தில் சரிந்துவிட்டாள்...

தனித்திருந்தவளின் நிலை மிகவும் பரிதாபமாய்... இருந்தது என்றால்....

நிகிலோ.... முன் தின இரவில் இருந்து... அடிப்பட்ட வேங்கையின் நிலையில் இருக்க... அறைந்து சாத்திய அறைக்கதவை இதுவரை திறக்கவில்லை...

அசைக்கவே... முடியாத எஃகு இரும்பாய் இருப்பவனை... ஒவ்வொரு முறையும் அவள் முன் சுக்குசுக்காக உடையப்படும் நிலைக்கு தள்ளப்படுவதை அறவே வெறுத்தான் .

அதுவும் அவளது கைத்தடங்கள் தன் கன்னத்தில் இடம் பெற்றது மட்டுமல்லாமல் வீசிய சொற்களும்... தன் முன் நின்ற சிறுவனும் நிழலாட... அவளிடம் மிருகமாய் மாற்றியிருந்தது அவனது மனம் .

இதுவரை எப்படியோ... ஆனால் இனியும் அவளைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையெனில்... ஆண் மகனாய் இருப்பதே வீண் என்றெண்ணியவனாக...

வேட்டையாட துடிக்கும் வேங்கையாய்... எதற்காகவோ காத்திருந்தவன் போல் அறையின் குறுக்கும் நெடுக்கும் நடைப்பயின்றவன்... வேண்டிய அழைப்பு வந்ததும்... கண்கள் மின்ன... அலைபேசியை காதில் வைத்தான் .

அவர்கள் சொன்ன சேதியில் அதிர்ந்து... பின் பளபளக்கும் விழிகளில் நின்றவனின் மனம் கோபத்தால் மட்டுமே நிறைந்திருக்க...  வெற்றிக் கொண்ட களிப்பில்... கேலியாய் நெளிந்த உதடுகளால்... நன்றி கூறி‌.. பணத்தை அக்கௌன்ட்டில் ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டதாக அழைப்பை துண்டித்தவன்...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now