உணர்விலே கலந்தவனே - 20

2.3K 54 3
                                    

பகுதி - 20

இத்தனை மாதங்களில் ஒரு முறை கூட அவனை அவள் சந்தித்ததில்லை… ஆனால் இப்போது... இப்படியொரு சூழலில் ஏற்பட்டிருக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் கதவை பார்க்க...  தங்க நிற தகட்டில் கருப்பு வண்ண எழுத்துக்களால் மிகவும் அலங்காரமாய்... நிகில் ஷர்மா என்று அவன் பெயரை தாங்கி நிற்க...

தன் கரத்தினால் மிகவும் நாசுக்காக தட்டி அனுமதி கேட்டு உள்ளே  நுழைந்தவள்… சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை…

சட்டென்று உடம்பில் ஓடிய நடுக்கம்… அன்று அவன் கூறியது யாவும் காதில் மீண்டும் ஒலிக்க… இப்படியே வெளியே சென்று விடலாமா... என்றும் எண்ணினாள்… ஆனால் அதுவும் பெரும் தவறாகவே முடியும் என்று நன்கு அறிந்திருந்தவளாள்… செய்ய முடியாமல் போகவே...

யாரை பார்க்கவே கூடாது என்று எண்ணினாளோ… மீண்டும்‌.. அவன் முன்னிலையில் ‌‌… அதுவும் வந்த காரணமோ‌… மேலும் வதைப்படுத்த... நகர மறுத்த கால்களை கடினப்பட்டு இரண்டடி முன்னேறி வைத்து.. அவன் முன் நின்றாள்..‌.

இப்போது புரிந்து கொண்டாள்… அந்த கடிதம் எதனால் என்று….

இவை அனைத்தையும் மீறி... அவள் உள் மனதோ... ஆழ்ந்து ஒருமுறை அவன் பெயரை உச்சரிக்கையில்... இரத்த நாணங்களில்... சிறு பரவசம் எட்டிப்பார்த்ததை‌.. உடலில் நடுக்கம் பரவ... அனுபவித்தாள் என்பது மறுப்பதிற்கில்லை...

தன் கரங்களால் கணினியை சுட்டி காண்பித்து ‌… நேற்று கீர்த்தி பார்த்த‌‌… காணொளியை அவள்… காண‌‌… அவளது முகத்தில் பயமோ… பதற்றமோ அல்லாமல்‌… ஆராய்ச்சி மட்டுமே படர்ந்திருந்தது… 

அவளுடைய கவனம் முழுவதும் கணிணியில் தாங்கி நிற்க… அது முடிந்த பின்பே‌.. தன் அருகே... மேஜையின் மூலையில் சாய்ந்து நின்றவனைக் கண்டதும் … அதிர்ந்து‌… நடுக்கத்தை மறைத்து ‌… மெல்லிய குரலில் , உயரத்தில் அடுக்கியிருந்த கண்ணாடி பொருட்கள் விழ இருந்ததால்… பின்னுக்கு இழுத்ததாக‌‌… கூறி… அது பதியப்படாமல் இருப்பதையும் உரைத்தவள்… அவன் முகம் காண தயங்கியவளாய்…. 

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora