பகுதி - 34
இருபத்தி நான்கு மணி நேரம் போதாதவனாய்... நிகில் இருந்தான் என்றால்... அதை எப்படி கடத்துவது என்றவளாய் அவன் மனைவி இருந்தாள் .
மாலை பொழுதில் வீடியோ காலில் மகனை அழைக்க... அழைப்பை ஏற்றதும்...
" தேவ்ம்மா... எப்படி இருக்க... மாமா... அத்த... எல்லாம் எப்படி இருக்காங்க..." என்று குசலம் விசாரிக்கவே...
அனைத்திற்கும் பதிலளித்தவன்...
" ஏம்மா... அப்பாவோட நீ வரல... " தேவ் கேட்கவே.. நிகில் அங்கிருப்பது... தெரியாததை மகனிடம் காட்ட விரும்பாதவளாய்...
" ஓ... அது... அது வந்து வேலை கண்ணா... நீ நல்லா படிக்கிறியா... மாத்திரை சாப்பிறியா... நீ வெளில... எல்லாம் தனியா போறதில்லையே...."
" சரி... ஒழுங்கா ஸ்கூல் போறியா... கீர்த்திய படுத்தாம..."
" ஆங்... அதெல்லாம் நாங்க போறோம்... ம்மா நா அத்தைய படுத்தல... அத்த தான் எல்லாரையும் படுத்துது தெரியுமா... "
" டேய்... அவ கேட்டதுக்கு ஏன்டா... என் வம்புக்கு வர..." என்று கீர்த்தி சிலிர்க்க...
அவனும் கீர்த்தியுடன் வம்பை தொடங்கிவிட்டான்...
" டேய் தேவ்மா...தேவ்மா... என்ட்ட பேசேன்டா... " என்றதற்கு பிறகே... அவளை மீண்டும் கவனிக்க...
" இரும்மா... டிஸ்டப்பன்ஸ் ஜாஸ்தியா... இருக்கு... " என்று கீர்த்தியிடம் பலிப்பு காட்டிவிட்டே... மொபைலுடன்... தந்தையின் அறைக்குள் வந்து பேசத் தொடங்கினான் .
" பேசி முடிச்சு... அவகிட்ட தான் போகணும்... பாத்துக்க..." கலையும் தோழிக்காக வரிந்துகட்டிக் கொண்டு மகனுடன் இருந்தாள் .
" ம்... ம்... அதெல்லாம் நான் அத்தைய கரெக்ட் பண்ணீடுவேன்... "என்று கூறய அழகில்... தவழும் புன்னகையுடன் ரசித்திருந்தவளிடம்...
" இன்னைக்கு... ஹாஸ்ப்பிடல் போனோம்..."
" ஓ.... என்ன சொன்னாங்க...."
நிகில் அலைபேசி வழியாக பல நாட்களுக்குப் பிறகு அவளை பார்க்கவும்... குரலை கேட்கவும்... செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டு... அவளையே பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...