அந்த பிரம்மாண்டமான மாளிகையில் இருக்கும்… பெரிய அறையில்… மிடுக்கான நடையோடு... கணீர் குரலில் கட்டளையிட்டு அந்த மாளிகையே நடுநடுங்க வைத்து ராணியாய் வலம் வரும் இந்திரா தேவியோ….
சற்று முன் தெரிந்த... அவரது தோற்றம் பொய்யோ என்பது போல் காட்சியளிக்க… இதுவரை இருந்த கம்பீரம் தொலைந்து போய்.... ஆள் உயர கணவனின் படத்தை வெறித்த பார்வையுடன் நின்றிருந்தவரை கண்டதும் உள்ளே நுழைந்தவர்களது மனம் நெழ்ந்தது என்னவோ உண்மை…
தாயை காண அவரது இருப்பிடம் தேடி வந்த அர்ஜூன் ஷர்மா மற்றும் அவரது மனைவி ஜான்வியை சிறுதலையசைப்பில் வரவேற்றவர்.... வந்த காரணத்தை சொல் என்பது போல் பார்க்க… அந்த கணம் தன் தாயின் தோற்றத்தில் கண்டமாறுதல்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை… அவரால் .
தன் மகன் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியில் இருக்கிறான் என்று உணராதவர்…. மருமகளின் முகம் காண… அவரோ நேர்கொண்ட பார்வை பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்திருந்தார் . மனதில் தோன்றிய குழப்பம் முகத்தில் தெரிய…" என்னாச்சு…? "( Kaay zaale) என்று மராத்தியில் வினவ…
தாயின் முகத்தை பார்த்தவர் இனியும் அமைதி காப்பதில் அர்த்தமில்லை என்று எண்ணியவராக… தன் அண்ணன் மகனின் நிச்சயதார்த்த விழாவை பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தாலும் நாளைய விழாவிற்கு நினைவுபடுத்தவும் அவனிட்ட கண்டிஷன்களை கூறவுமே தாயின் முன் நிற்க... எப்படி உரைப்பது என்று அறியாமல் திகைத்திருந்தவர் தன்னை சமன் செய்து கூற துவங்கினார் .
அவருக்கு வயது ஐம்பதை நெருங்கியிருந்தாலும்... பலாயிரக்கணக்கானோருக்கு முதலாளியாக இருந்தாலும்… அன்னையின் முன் அவன் சொல்லியதை சொல்லவதற்குள்ளாக அந்த ஏசி அறையிலும் முகத்தில் வேர்வை துளிர்த்திருந்தது....
அவர் கூறியது எதுவும் இந்திராதேவிற்கு உவப்பானதாக இல்லை இருந்தாலும்… தன் மகனின் தோற்றத்தையும்… பேரனின் பிடிவாத்தையும் எண்ணி சிறு முறுவல் தோன்ற… மருமகளின் முகம் பார்த்தார்… அவரோ ," எதுவும் கேக்க மாட்டேங்கறான்… கல்யாணம் நல்லபடியா முடியட்டுமே.. அத்தை ...(kahi maganara nahi...lagna cangale sampauvya mavashi ..) " , என்றார் .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...