உணர்விலே கலந்தவனே - 50

3K 63 10
                                    

பகுதி - 50

அந்த மௌனத்தில் அடிவாங்கியவனாக... கண் மூடி தன்னை சமன் செய்து கொண்டவன்... அவள் பார்வை சென்ற திசையை... கவனித்து... சிறு மென்னகை பூக்க...

" எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்... அந்த ஊஞ்சல்... ஹாஸ்டலில் இருந்து வந்தா... யாருமே இருக்க மாட்டாங்க... அந்த ஊஞ்சல போய் உட்கார்ந்துட்டேனா...  நேரம் போறதே தெரியாது... குருவி நிறையா இருக்கும்... வந்து வந்து.‌‌.. அதோட குஞ்சுகளுக்கு எதாவது கொடுத்துட்டே போகும்.‌‌...  அந்த ஜீவனுக்கு கூட அதோட குழந்தையப்பத்தின நினைப்பிருக்கும்... அணிலும் விளையாட்டிட்டே இருக்குமா... அவ்வளவு அழகா இருக்கும்..." என்று முதல் முறையா தன் மனப்புத்தகத்தை அவன் அறியாமலேயே அவளிடம் திறக்க தொடங்கியிருந்தான் .

காலை உணவு முடித்ததும்...

" கனி..‌ எனக்கு வேலை இருக்கு... நான் வர ஏழு மணி ஆகும்... பத்திரமா இருந்துக்குவியா... நாளைக்கு நாம அத்த வீட்டுக்கு போகலாம்... காயத்ரிம்மா  உனக்கு வேலை பாக்குறவங்கள பத்தி ‌
சொல்லுவாங்க... கண்டிப்பா நான் போகணும்‌.. போயிட்டு வரேன்..."  அவளை தனியே விட்டு செல்ல வேண்டுமே என்று மனமற்றவனாக சொல்லிக் கொண்டிருந்தான்...

இதுநாள் வரை போகவா... போயிட்டு வரேன்... என்று சொல்ல ஆளில்லாமல் இருந்த வீட்டில்... அவனுக்காகவென்றே... அவனால் வந்த சொந்தமாய் அவள் இருக்க... அவளிடம்‌... கேட்டுக் கொண்டிருந்தான்...

ஆச்சரியமாக விழி விரித்தாலும்... ம்... என்று சொன்னதும் நகர்ந்துவிட...‌.  கதவு வரை சென்றவனிடம்..." மதியானம் சாப்பிட... " என்று பாதியில் விழுங்கி நிற்கவும்... அழகான பல் வரிசை தெரிய... சிரித்தவன்...

" வீட்டுக்கு வர டைம் இருக்காதுடா... பை... " என்று சொன்னவனுக்கு பிண்ணியிருந்த சோர்வும் விடைப்பெற்ற துள்ளலோடே... மகனுக்கும் முத்தம் பதிக்க மறக்காமல்... நான்கு சக்கர வாகனத்தில் பறந்திருந்தான் .

அவன் செல்லும் வரை ஜன்னல் வழியே... பார்த்திருந்தவள்... ' ச்சே.. அப்படியெல்லாம் இல்லைன்னு வாய் திறந்து சொல்லி இருக்கலாமில்ல...'  என்று தன்னை தானே கடிந்து கொண்டவளாக இருக்கும் நேரம்‌...

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)Where stories live. Discover now