பகுதி - 56
நாளை பெங்களூருக்கு கிளம்ப வேண்டும் என்றிருக்க... சியாமளாவே தொடங்கினார்...
" கலை தேவ்வோட... டீசி இன்னும் ஸ்கூல்ல வாங்கலையே... நீயும் எங்களோட வந்து வேலைய முடிக்கலாமே.." என்று பெரியவராய் கேட்க...
" இல்லம்மா... அவன் அங்கேயே படிக்கட்டும்... அடுத்த வருஷம் பாத்துக்கலாம்னு அவங்க சொல்லீட்டாங்க அம்மா..." என்றாள்...
ஓ... என்று புருவம் சுருக்கி... "உனக்கு... உனக்கு அதுனால எந்த சங்கடமும் இல்லையே.." என்று மெதுவாக கேட்டதில்... பூக்கட்டிக் கொண்டிருந்தவள் தொடர்ந்தவளாக... " என் அம்மா வீட்டுல... என் புள்ளைய விட எனக்கு என்னம்மா சங்கடம்.. உங்களுக்கோ... அண்ணா அண்ணிக்கோ இடஞ்சல்ன்னு நினைச்சா... சொல்லுங்க... நானும் டீசி வாங்க வரேன்... " என்று மிக மிக இயல்பாக தன் தாயிடம் பேசுவது போல் பேசவே...
" ஐயோ... என்னடா இப்படி சொல்லீட்ட.. என் பேரன் என் வீட்டுல இருக்க... நான் வேண்டான்னு சொல்லுவேனா... " என்று பதறவும்...
நிமிர்ந்து பார்த்தவள்... " நா அவங்கட்ட கோபமா இருந்து வந்தது நம்ம வீட்டுக்கு... எனக்கு என் தாய் வீடு இல்லையேங்க வருத்தம் எப்போ உங்கள எல்லாம் பாத்தேனோ அப்பவே மாறிடுச்சு... ஆனா நீங்க யாருமே என்னை உங்க வீட்டு பொண்ணா பாக்கல... நினைக்கல... அவங்க சொந்தம்... அவங்க பையன் உங்களுக்கு சொந்தம்... ஆனா நான் உங்களுக்கு யாரோ... " என்று விலாசிக் கொண்டிருக்க...
நந்தன் மட்டும் நீ நடத்து.. நடத்து... என்று உதட்டோரம் துடித்த சிரிப்பை மறைத்தவனாக... மொபைலுக்குள் தலையை புதைத்துக் கொண்டான்...
மற்ற மூவரும் அதிர்ந்து நோக்க.. "ச்சை என்ன கலை... அப்படியா உன்னை நாங்க நினைப்போம்... " என்று சுதாரித்து முதலில் பாலா சமாதானத்திற்கு முயல...
" நீங்க பேசாதீங்க... உங்க மேல பயங்கரமான கோபத்தில் இருக்கேன்... நம்ம பஞ்சாயத்தை அப்புறம் பாத்துக்கலாம்... " என்று ஒரே போடாய் போட்டு... அவன் வாயை அடைக்க...
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...