சஞ்சய் என்னும் நிகில் ஷர்மாவிற்கு என்றுமே தொடர் வண்டியின் பயணத்தின் மீது அலாதி பிரியமுண்டு.... மணிக்கு ஒரு நாடு தாவும் நிலையில் உள்ளவன்...அதற்கு சொந்த planeகள் கையில் வைத்திருப்பவன்... ஆனாலும் அவனது ஈடுபாடு என்னவோ ரயிலில் தானிருக்கும்...நேரங்கள் கிடைக்காத போதும் அதற்காகவே நேரத்தை உருவாக்கி பயணம் செய்யுமளவிற்கு....இரயில் பயணத்தின் மீது பித்தம்... என்ன... தான் பயணம் மேற்கொள்ள நினைக்கும் பொழுதெல்லாம்.... மொத்த கம்பார்மெண்ட்டையே புக் செய்துவிடுவான் .
அப்படி ஒரு பயணத்தின் போது தான் மீண்டும் அவளை சந்தித்தான்... அவளோ....
மொபைலை காதிலும் ஒற்றை பெரிய பையை தோளிலும் மாட்டி ஓடி வந்தவளின் மீது தன் கவனம் பதிய... அவளையே பார்த்திருந்தவனின் உதடுகளோ ridiculous... என்று முணுமுணுக்க... ரயிலோ மெல்லமாக நகரத் தொடங்கியது...அதை கண்டவனோ.. அவளுடைய நிலையறிய கதவிற்கருகில் வருகையில் பொத்தென்று விழுந்த பை தாண்டி பார்க்க... அவளோ கையை நீட்டி பிடிக்க நினைத்து ஓடி வர... இரயிலின் வேகம் கூடியது...
அவளது பிடி தடுமாறி நழுவ... வண்டியின் சக்கரத்தில் விழயிருந்தவளை... சட்டென்று தன் கரத்தினால் உள்ளித்து அவளை தள்ளிய பின் நில்லாமல் தன் கூபேவிற்குள் நுழைந்து விட்டான். இழுத்துவிட்ட வேகத்தில் எதிர் திசையில் இருக்கும் கதவில் மோதி நின்றவளோ மூடியவிழிகளை திறக்க பயந்தவளாய்...
அவன் அவளது கரத்தை பற்றவில்லையெனில் நிச்சயமாக உயிர் பிழைப்பதற்கு சாத்தியம் இல்லை என்பது அவளும் அறிவாள் அவனும் அறிவான்...உயிர் பயத்தில் உறைந்தவளோ விழி திறக்க அஞ்சியவளாய்....சில நிமிடங்களுக்கு பிறகே கண் திறந்தாள் .
தன் பின் மண்டையை தேய்த்தவாறே திரும்பி பார்க்க கதவை அடைக்கும் சத்தம்... அதன் பிறகு தன் பெட்டியை நோக்கி நகர்ந்தவளோ அந்த பெட்டியின் வழியே மறுபெட்டிற்கு செல்ல முடியாது என புரிய... மீண்டும் அங்கேயே வந்து நின்றாள் ...
அவளுடைய நடமாட்டத்தை உணர்ந்தாலும் சஞ்சய்க்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது வேறு பாடாய் படுத்த... குளிரில் நடுங்கிய உடலை தாங்க முடியாமல்... வெடித்து விடுமளவிற்கு வலித்த தலையை தாங்கியிருந்தவன்... மருந்தை உட்கொள்ள நினைத்து எழ... நடுங்கிய உடலும் இரயிலின் தள்ளாட்டமும் சேர்ந்து அவனை கீழே தள்ளியது .
YOU ARE READING
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
Romanceதாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈட...